திருவாலங்காடு, மே. 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி வட்டம், திருவாலங்காடு அருகேவுள்ள சக்கரமநல்லூர் கிராமத்தில் வெயிலுக்காக அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஒதுங்கியவர்கள் தாகத்திற்கு தண்ணீர் கேட்டு குடித்து விட்டு, பின்பு வெயில் அதிகமாக இருக்கிறது சற்று திண்ணையில் இளைப்பாரி செல்கிறோம் என இரு சக்கர வாகனத்தில் இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் உள்ளிட்ட நான்கு பேர்கள் அவ்வீட்டின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர்.அவரும் சரி என சொல்ல திண்ணையில் உட்கார்ந்திருந்து அவர் அசந்த நேரம் பார்த்து வீட்டிற்குள் நுழைந்து பீரோவில் இருந்த தங்கநகை மற்றும் பணம் உள்ளிட்டவைகளை சுருட்டிக் கொண்டு கம்பியை நீட்டிவுள்ளனர்.
சக்கரமநல்லூர் கிராமத்தில் வசிப்பவர் துளசிராமன் மேலும் அவர் கட்டடம் கட்டும் தொழிலாளி ஆவர். இந்நிலையில் கடந்த மாதம் 29ஆம் தேதி வேலை சம்பந்தமாக சென்னைக்கு சென்றுள்ளார். அதனால் அவரது வீட்டில் மனைவி, மற்றும் மகள் ஆகிய இருவரும் மட்டும் தனியாக இருந்துள்ளனர்.
மேலும் அதனைத் தொடர்ந்து அவர்கள் வீட்டு அருகே 2 பெண் ஒரு ஆண் உட்பட 3 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் வெயில் அதிகமாக இருக்கிறது குடிக்க தண்ணீர் வேண்டும் என்று துளசிராமன் மனைவியிடம் கேட்டுள்ளனர். தண்ணீர் கொடுத்தவுடன் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் உங்கள் வீட்டு பகுதியில் சற்று ஓய்வெடுத்து பின்பு செல்வதாக தெரிவித்துள்ளனர்.
அவரும் சரி என சொல்ல அவர்கள் மூவரும் வீட்டின் முன்பக்கம் அமர்ந்துள்ளனர். அப்பொழுது வீட்டின் பின் புறமாக துளசிராமனின் மனைவி மற்றும் மகள் கால்நடைகளுக்கு உணவு அளிக்க சென்றுள்ளனர்,
அப்பொழுது வீட்டு கதவு திறந்திருப்பதை கண்டவுடன் வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்த மூன்று பேரும் வீட்டிற்கு உள்ளே சென்று பீரோவில் இருந்த நான்கு சவரன் நகை, மற்றும் நான்காயிரம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவைகளை திருடி கொண்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்,
பின்னர் வீட்டுக்கு உள்ளே வந்து பார்த்த துளசிராமனின் மனைவி பீரோ திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து நாம் ஏமாந்து விட்டோம் என்பதை உணர்ந்த அவர்கள் உடனடியாக அத்திருட்டுக் குறித்து திருவாலங்காடு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல் ஆய்வாளர் ராஜகோபால் அது தொடர்பாக அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகள் மூலம் பார்த்த போது அத்திருட்டில் ஈடுப்பட்டது பேரம்பாக்கம் அருகில் உள்ள இருளஞ்சேரி சார்ந்த பிரியதர்ஷினி, கண்டம்பாளையத்தை சேர்ந்த வினிதா, தக்கோலத்தை சேர்ந்த ஆனந்தன் மற்றும் முருகன் என்பது அவர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்ததை தொடர்ந்து அவர்கள் நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் கட்டட தொழிலாளி துளசிராமன் வீட்டில் நகை பணம் திருடியவர்கள் அவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு, மேலும் அவர்களிடமிருந்து நான்கு சவரன் நகை, திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய விலை உயர்ந்த இரண்டு மோட்டார் சைக்கிள் களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பின்பு அவர்கள் நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.



















