மயிலாடுதுறை, மே. 23 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
வைகாசி மாதம் நரசிம்ம பெருமாள் ஜெயந்தியை முன்னிட்டு. சென்பகச்சேரி நரசிம்ம பெருமாள் கோயிலில் லக்ஷ்சார்ச்சனை வெகுச்சிறப்பாக நடைப்பெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தை அடுத்துள்ளது சென்பகச்சேரி.. இங்கு சுயம்பு யோக லஷ்மி நரசிம்மர் கோயில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறது இக் கோயிலில் யோக லக்ஷ்மி நரசிம்ம பெருமாள், ஜெயந்தியை ஒட்டி. வைகாசி பெருவிழா நடந்து வருகிறது. இதனையொட்டி இன்று. நரசிம்ம பெருமாளுக்கு லட்சார்சனை, ஆலய நிர்வாகி, இராம பக்தர் செந்தில்குமார் முன்னிலையில், வைனவ கோத்திரத்தை சேர்ந்த பட்டாச்சாரியர் கள், வேத குண்டத்தில் ஆகுதி செய்து . லஷ்ச்சார்சனை செய்தனர்..
இந்த யோக லஷ்மி நரசிம்மர் ஜெயந்தியை ஒட்டி ஏராளமான பக்தர்கள் கூடி, யோக லக்ஷ்மி நரசிம்மரை போற்றி. ஓம் நமோ நாராயன நமக என முழக்கமிட்டு மிக சிறப்பாக லஷ்சார்ச்சனை விழா கொண்டாடப்பட்டது





















