கும்பகோணம், ஏப். 24 –

கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழாவில்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடமேந்தி ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டனர்.

கும்பகோணம் அருகே முத்தையா பிள்ளை மண்டபம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் செடல் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்   இந்தாண்டுக்கான விழாவானது இன்று தொடங்கி 22 5 2022 ஞாயிற்றுக்கிழமை வரை சுமார் ஒரு மாதகாலம் நடைபெறுகிறது.

அதன் தொடக்கமாக இன்று காலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடமேந்தி ஊர்வலம் வந்து  அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலை காப்பு கட்டுதல் அதனைத் தொடர்ந்து தினமும் அம்மன் வீதி உலாவும் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான செடல் திருவிழாவானது 8. 5 .2022 அன்று மாலை நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து ஆனந்த காளியம்மன் திருநடன விழாவானது 11, 12, 13 ,தேதிகளில் நடைபெறுகிறது. 25 2002 ஞாயிற்றுக்கிழமையுடன் விழா நிறைவு பெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் பழனிவேல் மற்றும்  கிராம நாட்டாமைகள் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here