தில்லி, ஆக 3-
ஒன்றிய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் கொவிட் – 19 பற்றிய அண்மைச் செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் பின் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடு தழுவிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் இதுவரை 47.85 கோடி கொவிட் தடுப்பூசி டோஸ்கள் போடப்பட்டுள்ளன.
இதுவரை மொத்தம் 3,08,96,354 பேர் குணமடைந்துள்ளனர்.
குணமடைந்தவர்களின் விழுக்காடு 97.38%.
கடந்த 24 மணி நேரத்தில் 38,887 பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 30,549 பேர் புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 4,04,958 ஆக உள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் விழுக்காடு 1.28%.
வாராந்திர தொற்று உறுதி விழுக்காடு 5%க்கும் குறைவாக, 2.39%ஆக உள்ளது.
தினசரி தொற்று உறுதி வீதம் 5%க்கும் கீழ், 1.85%ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 47.12 கோடியாக அதிகரித்துள்ளது என்று அச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.