கும்பகோணம், ஜூன். 08 –

கும்பகோணத்தில் பெசன்ட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (42) இவர் நகை கில்ட் ஷாப் நடத்தி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி (35) இவர்களுக்கு எல்கேஜி படிக்கும் 3 வயது மகனும்,  யூகேஜி படிக்கும் சேர்க்கப்பட்டுள்ள கோபிகா (4) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று செவ்வாய்கிழமை காலை பச்சையப்பன் தெருவில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிக்கும் ராஜாவின் தங்கை வீட்டில் கோபிகாவை அவர்களது பெற்றோர் விட்டு சென்றுள்ளனர்.

அப்போது 4-வது மாடியில் உள்ள வீட்டின் பால்கனியில் விளையாடிக் கொண்டிருந்த கோபிகா எதிர்பாராதவிதமாக தவறிக் கீழே விழுந்துள்ளார். அச் சம்பவத்தை பார்த்த அக்கம்பக்கத்தினர் அருகிலுள்ள  தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த குழந்தை கோபிகா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து கோபிகாவின் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து கும்பகோணம் கிழக்கு காவல் துறையினர்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here