கும்பகோணம், ஜன. 09 –

கும்பகோணத்தில் நடைப்பெறவுள்ள சுவாமி விவேகானந்தர் 161 ஜெயந்தி விழா அன்று ஒரு நாள் மது கடைக்கு விடுமுறை அறிவிக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் இன்று கோரிக்கை முழுக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா சார்பில் சுவாமி விவேகானந்தர் 161 வது ஜெயந்தி விழா வருகின்ற 12ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மேலும் விவேகானந்தர் ஜெயந்தி விழாவை மத்திய அரசு தேசிய இளைஞர் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.

இந்நிலையில் விவேகானந்தர் ஜெயந்தி அன்று இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அன்று ஒரு நாள் மதுபான கடைக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 10 ஆண்டுகளாக தாங்கள் போராடி வருவதாகவும், மேலும்  காந்தி ஜெயந்தி, மகாவீர் ஜெயந்தி, மிலாது நபி, வள்ளலார் தினம், திருவள்ளுவர் தினம், ஆகிய நாட்களில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளித்து அவர்களை கௌரப்படுத்தும் தமிழக அரசு, விவேகானந்தர் ஜெயந்தியன்றும் விடுமுறை அளித்து கெளரவபடுத்த வேண்டும்.எனவும்,

மேலும் தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற கூட்டத்தொடரில் விவேகானந்தர் ஜெயந்தியன்று  மதுபான கடைக்கு விடுமுறை அறிவிக்க அரசாணை இயற்ற வலியுறுத்தி பக்தபுரி ரவுண்டானாவில் இருந்து விவேகானந்தர் திருவுருவப் படத்துடன் மது பாட்டில்கள் மாலையாக போட்டுக் கொண்டு, பூட்டுச் சங்கிலியுடன் இந்துமக்கள் கட்சிஅனுமான் சேனா மாநில பொதுச் செயலாளர் பாலா தலைமையில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  மாவட்ட பொதுச் செயலாளர் தினேஷ்  நகரச் செயலாளர் ஹரி பிரசன்னா சித்தர் பேரவை மாவட்டத் தலைவர் பாரதிதாசன் சிவசேனா நகர தலைவர் ஆனந்த் இளைஞர் அணி நிர்வாகிகள் மதன், சிவக்குமார், சசிகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டு ஊர்வலமாக சென்று கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவினை வழங்கினார்கள்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here