புதுச்சேரி, மார்ச். 02 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்..
புதுச்சேரி திருவள்ளுவர் நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தியால்பேட்டை காவல் நிலையத்திற்கு கிடைத்த ரகசியத் தகவல் வந்துள்ளது. அத் தகவலின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் குரு தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து சென்று கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது அப்பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த வாலிபரை பிடித்து சோதனை செய்தததில் அவரிடம் விற்பனைக்காக வைத்திருந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது. அதனையடுத்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து தொடர் விசாரணை மேற்கொண்டதில், அவர் கோட்டகுப்பம் பகுதியை சேர்ந்த அப்துல் என்பதும், மேலும் அவர் சட்ட விரோதமாக கடத்தி வந்த கஞ்சா பொட்டலங்களை கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்ததும் மேலும் அவ்விசாரணையில் தெரிய வந்தது. அதன் பின்னர் அப்துலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.





















