குடவாசல், ஜூலை. 10 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ளது சீதக்கமங்களம் கிராமம் இக்கிராமத்தில் சுமார் 700 ஏக்கர் அளவில் விவசாய நிலங்கள் உள்ளது, இந் நிலங்களுக்கு விவசாயிகள் விவசாய இடு பொருட்கள் எடுத்து செல்ல மற்றும் விவசாயம் செய்வதற்கு வழிப்பாதையாக வரப்பு மட்டும் இருந்து வந்த நிலையில் இடுபொருட்களை எடுத்துச் செல்ல பல ஆண்டு காலங்களாக மிகவும் சிரமப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் தற்போது அதற்கான விடிவை எட்டும் வகையில் அரசாங்கத்தின் உதவியை நாடாமல் 11 விவசாயிகள் ஒன்று சேர்ந்து, தங்களது சொந்த செலவில் சுமார் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் மேலராமன்சேத்தி முதல் பனமரத்து கரை வரை 3 கிலோமீட்டர் தூரம் மண் சாலை அமைத்துவுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அச்சாலை மக்கள் பயன் பாட்டிற்கு அர்ப்பணிக்கும் விதமாக இன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் கலியபெருமாள் ரிப்பன் வெட்டியும், பூஜை செய்தும் பூசணிக்காய் உடைத்து துவக்கி வைத்தார்.
இச்சாலை பயன்பாட்டால் 200 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள். என அக்கிராம மக்கள் விவசாயிகளை வாழ்த்தினார்கள். மேலும் இந்த விழாவில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.






















