மாங்காடு, ஏப். 05 –

திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை காவல்நிலையத்தில் குற்றப்பிரிவில்  தலைமை காவலராக பணிபுரிபவர் ஜெயக்குமார் வயது 50 இவர் மாங்காடு பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில்  மாங்காட்டில் அவரது வீட்டில்  இருந்த ஜெயக்குமாருக்கு உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போது வழியிலயே உயிரிழந்தார்.

நீண்ட நாட்களாக கல்லீரல் பிரச்சனையால் மாத்திரை சாப்பிட்டு வந்த ஜெயகுமார் தற்போது உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதுக்குறித்து மாங்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது உடலை KMC மருத்துவமனைக்கு உடல்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here