திருவள்ளூர், மே. 07 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் மாவட்டம், பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் மக்கள் பயன்பாட்டிற்காக கோடைக்கால தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைப்பெற்றது. அதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற முன்னாள் அமைச்சர் மற்றும் பூந்தமல்லி எம்எல்ஏ ஆகியோர் திறந்து வைத்தனர்.

கோடை வெயிலின் தாக்கத்தை போக்கும் வகையில், காக்களூர் பைபாஸ் சாலையில் பழைய கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலையில் திமுக மாணவர் அணி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. அதனை முன்னாள் அமைச்சரும் ஆவடி எம்எல்ஏ வுமான சா. மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் தண்ணீர் பந்தலை திறந்து வைத்தனர்.

திருவள்ளூர் மத்திய மாவட்ட திமுக மாணவர் அணி அமைப்பாளர் தியாகராஜன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். மாநில மாணவர் அணி இணை செயலாளர் பூவை சி. ஜெரால்டு மாவட்ட நிர்வாகிகள் நடுகுத்தகை ரமேஷ்,  விமல் வர்ஷன்,  எத்திராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் முன்னாள் அமைச்சரும் மத்திய மாவட்ட செயலாளருமான ஆவடி சா.மு. நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொது மக்களுக்கு மோர் தர்ப்பூசணி வெள்ளரி பிஞ்சு கீரை, விசிறி போன்ற பொருட்களை வழங்கினார்.

அந்நிகழ்வில் நிர்வாகிகள் சுரேஷ்குமார் சௌந்தர்ராஜன் மூர்த்தி ஒன்றிய நிர்வாகிகள் சொக்கலிங்கம் சீனிவாசன் பரமேஸ்வரன் மாணவரணி துணை அமைப்பாளர்கள் புருஷோத்தமன் விக்டர் , மோகன் மற்றும் உமா மகேஸ்வரன் சரவணன் திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here