திருவாரூர், செப். 04 –
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அருகே பேரளத்தை சேர்ந்த காளீஸ்வரன் லதா என்பவரின் மகன் கார்த்திகேயன் (வயது 19). தாயார் லதா இறப்பிற்கு பின்பு சித்தப்பா பாலதண்டாயுதம் என்பவர் வீட்டில் தற்போது வசித்து வருகிறார்.
இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு சிறு வயதில் இருந்து கைப்பந்து விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்துள்ளார்.
அதன் விளைவாக கைப்பந்து விளையாட்டில் விடாமுயற்சியால் தொடர் பயிற்சிகளை மேற்கொண்டு பள்ளி, கல்லூரி, மாவட்டம் மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்து வந்த நிலையில். இந்திய கைப்பந்து விளையாட்டு அணியில் தேர்வாகினார்.
இந்நிலையில் இந்திய அணி சார்பாக பக்ரைன் நாட்டில் ஏசியா அளவிலான வாலிபால் போட்டி கடந்த 22 முதல் 29ஆம் தேதி வரை நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 12 பேர் சென்றனர், அதில் பேரளம் பகுதியைச் சேர்ந்த கார்த்தியும் சென்றுள்ளார்.
நடைபெற்ற போட்டியில் இந்திய அணி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளி பதக்கத்தை வென்றுள்ளனர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த கார்த்திகேயனை பேரளம் கடைவீதியில் பட்டாசு வெடித்து பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.
மேலும் ஏசியா அளவில் 17 நாடுகள் பங்கேற்ற நிலையில் அதில் லிபரோ என்ற சிறந்த ஆட்டநாயகன் விருதும் கார்த்திகேயன் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.