ராமநாதபுரம், மே 2-
தனி மனித ஒழுக்கம் என்பது மிகவும் முக்கியம். ஒரு மனிதனை ஒழுங்குபடுத்தினால் உலகமே ஒழுங்காகும் என்பது உண்மை, என பட்டளிப்பு விழாவில் ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் பேசினார்.
ராமநாதபுரம் பாத்திமா கல்வி நிறுவனங்கள், மதர் தெரசா மகளிர் பல்கலை., கல்வி மையத்தின் 11ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் பாத்திமா கல்வி நிறுவனங்களின் தாளாளர் முகமது சலாவுதீன் தலைமை வகித்து பேசும்போது, இன்றைய ஆசிரியர்கள் நாளைய சமுதாயத்தை உருவாக்குவார்கள். ராமநாதபுரம் மாவட்டம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி விகிதத்தில் மாநில அளவில் 2ம் இடம் பிடித்துள்ளது. இதற்கு ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. அவர்களை இத் தருணத்தில் பாராட்டியே ஆக வேண்டும். பெண்கள் நாட்டின் கண்களாக போற்றப் படுகிறார்கள். அவர்களுக் காகவே அன்னை தெரசா மகளிர் பல்கலை கழகம் செயல் படுவதும் அதில் பாத்திமா கல்வி நிறுவனங்கள் இணைந்து இன்று பெண்கள் பட்டம் பெறுவது மிகவும் மகிழ்ச்சி யானது. எங்கள் பாத்திமா அறக் கட்டளை மக்கள் சேவையில் பல்வேறு பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பாக கஜா புயலால் பாதிக்கப் பட்ட மாவட்டங் களில் எங்கள் அறக் கட்டளை சார்பில் நிவாரண உதவி வழங்கினோம். சமுதாய சிந்தனையுடன் செயல்படும் எம் கல்லூரியில் போதை ஒழிப்பு விழிப் புணர்வு கூட்டம் மற்றும் புது வலசையில் பிரசாரத்தில் மாணவர்கள் ஈடு பட்டனர், என்றார்.
ராமநாதபுரம் சேதுபதி அரசு கல்லுாரி முதல்வர் மகுதம்மாள் சிறப்பு விருந்தினராக பங் கேற்று மாணவி களுக்கு பட்டங்களை வழங்கிய பின் பட்டமளிப்பு விழா பேரூரையில் பேசியதாவது:
இங்கு திரளாக பட்டங்கள் வாங்க வந்துள்ள ஆசிரியர் களுக்கு பட்டங்கள் வழங் கியதற்கு நான் ஆண்ட வனுக்கு நன்றி சொல் கிறேன். ஆசிரியர் பணி என்பது மிகவும் முக்கிய மானது. நான் செல்லும் இடங்களில் அடிக்கடி கூறுவது. ஆசிரியர்கள் தங்களிடம் பயிலும் மாணாக்கர்களை நன்கு கண்டறிந்து ஒவ் வொருவரின் தனித் திறமைகளை வெளிக் கொணர முயற்சிக்க வேண்டும். மாணவர் களுக்கு ஆசிரியர்கள் தான் ரோல் மாடல். மாணவர் களிடம் தன்னம் பிக்கையை வளர்த்து விடுங்கள். நேர் மறையான பேச்சை வளர்த்து விடுங்கள். இதற்கு ஒரு உதாரணம் ஒரு மன்னர் தன் கனவில் பற்கள் அனைத்தும் விழுந்து விடுவதாக கனவு கண்டார். அதற்கு விளக்கம் கேட்ட போது ஒரு ஜோசியர் வந்து, ” உங்கள் உறவினர்கள் அனைவரும் உங்களுக்கு முன்னதாக இறந்து விடுவார்கள்” என கூறியதும் அந்த ஜோசியரை மன்னர் சிறையில் அடைக்க உத்தர விட்டார். பின் அரண்ம னையின் பிரதான ஜோசியர் வெளியூர் சென்றவர் திரும்பி வந்தபின் நடந்த வைகளை கேட்டு அறிந்து மன்னரை சந்தித்தார். அப்போது மன்னரின் கனவு குறித்து கேட்டதற்கு அரண்மனை ஜோசியர், “மன்னா…நீங்கள் உங்கள் உறவுக் காரர்களை விட அதிக காலம் உயிர் வாழ்வீர்” என்றார். மகிழ்ச்சி யடைந்த மன்னர் என்ன வேண்டும் கேளுங்கள் என கூறினார். அரண்மனை ஜோசியர் சிறையில் உள்ள ஜோசியரை வெளியே விடுவிக்க கோரியதின் அடிப் படையில் மன்னர் விடு வித்தார். இதில் இரண்டு ஜோசியர்கள் கருத்தும் ஒன்று தான் ஆனால் சொல்லும் விதம்தான் மாறு கிறது. எனவே பாசிடிவ் அப்ரோச் என்றும் நன்மை விளை விக்கும். குறிப்பாக மாணவர் களிடம் தனி மனித ஒழுக்கத்தை நன்கு கற்றுத் தரவேண்டும். ஒரு மனிதனை ஒழுங்குப் படுத்தினால், உலகமே ஒழுங்காகி விடும்.
இவ்வாறு உரை யாற்றினார்.
விழாவில் கல்லுாரி பேராசிரியர் ராமகிருஷ்ணன் உட்பட பலர் பேசினர். முன்னதாக மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடந்தது.