கும்பகோணம், பிப். 5 –
கும்பகோணம் மாநகராட்சி வேட்புமனு பரிசீலனை இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது 18வது வட்ட அதிமுக சார்பில் போட்டியிடும் கண்மணி கோவிந்தராஜ் வேட்புமனுவில் உறுதிமொழி பத்திரத்தில் தவறு இருப்பதால் அந்த மனுவை நிராகரிக்க வேண்டும் என்று அதே வட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வர்ஷா அழகேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்ததால் திமுக அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
நிறைவாக, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் மரு. பிரேமா அதிமுக வேட்பாளர் கண்மணி கோவிந்தராஜ் மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவித்ததை தொடர்ந்து பிரச்சினை முடிவுக்கு வந்தது.























