இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்  மாவட்ட தேர்தல் அலுவலர் /ஆட்சித் தலைவர்  கொ.வீர ராகவராவ் தலைமையில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச்சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக்கப் பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதி களுடன் கலந்தாலோசிக்கும் கூட்டம் நடைப்பெற்ற போது எடுத்தப் படம்  

 

ராமநாதபுரம், மே 1-

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தலமையில் உள்ளாட்சி அமைப்பின் வரைவு வாக்குச் சாவடி பட்டியல்கள் தொடர்பாக அங்கீகரிக் கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதி நிதிகளுடன் கலந் தாலோசனை கூட்டம் நடைப் பெற்றது.

கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் பேசியதாவது:

தற்போது தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தலை நடத்து வதற்காக சமீபத்தில் வெளியிடப் பட்ட சட்ட மன்ற வாக்காளர் பட்டியலின் அடிப் படையில் உள்ளாட்சி அமைப்பு களுக்கான வாக்காளர் பட்டியல் தயார் செய்திடவும், வாக்கு சாவடி பட்டியலை இறுதி செய்திடவும் அறிவுரை வழங்கி உள்ளது. தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைப்படி ஜனவரி 2019ல் வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலை அடிப் படையாக கொண்டு ஊரக மற்றும் நகர்புற உள்ளாட்சி அமைப்பு களுக்குரிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல்கள் தயாரிப் பதற்கான பூர்வாங்க பணி ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

வாக்குச் சாவடி அமைக்கும் தேர்வில் நகர் புற தேர்தலை பொருத்த மட்டில் ஒரு வாக்கு சாவடிக்கு குறைந்த பட்ச வாக்காளர் களாக 400 எனவும், அதிகப் பட்ச வாக்காளர் களாக ஆயிரத்து 400 எனவும் ஊரக பகுதிகளுக் கான தேர்தலை பொருத்த மட்டில் குறைந்த பட்சம் 400 எனவும் அதிகப் பட்சம் ஆயிரம் வாக்காளர்கள் வரை அனு மதிக்கலாம். அவசியம் ஏற்படின் சூழ்நிலைக் கேற்ப அதிகபட்ச வாக்காளர் எண்ணிக் கையை ஆயிரத்து 150 வரை அனுமதிக் கலாம் எனவும் வரை யறை செய்யப் பட்டுள்ளது.

இதன்படி இந்த மாவட்டத்தில் நான்கு நகராட் சிகளில் 219 வாக்கு சாவடிகளும் 7 பேரூராட்சி களில் 111 வாக்குச் சாவடிகளும், 11 ஊராட்சி ஒன்றியங் களில் ஆயிரத்து 784 வாக்கச் சாவடிகளும் ஆக மொத்தம் 2 ஆயிரத்து 114 வாக்குச் சாவடிகள் அமைக்க வரைவு அறிக்கை தயார் செய்யப் பட்டு ஏப்.23 ம் தேதி அன்று வரைவு வாக்குச் சாவடி பட்டியல் வெளியிடப் பட்டு்ளது. 2011 தேர்தலின் போது அனுமதிக்கப் பட்ட வாக்குச் சாவடிகளின் எண்ணிக் கையை விட தற்போது 71 வாக்கு சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப் பட்டுள்ளது.

இவ்விதம் வெளியிடப் படும் வரைவு வாக்குச் சாவடிகள் பட்டியலின் பேரில் பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சிகளிட மிருந்து கோரிக்கை மனுக்கள் ஏதும் வரப் பெறின் அவற்றை உரிய வாறு பரி சீலனை செய்து தேவைப் படின் உரிய திருத்தங்கள் மேற் கொண்டு இறுதி செய்யப் பட்ட வாக்குச் சாவடி பட்டியல் மே 6ம் தேதி வெளியிடப் பட்டு அதன் அச்சுப் பிரதிகள் வினியோகம் செய்யப் படும்

என மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.

இக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியிரின் நேர் முக உதவியாளர் (உள்ளாட்சி தேர்தல்) கணேசன், ஊராட்சிகளின் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here