மன்னார்குடி, டிச. 26 –
திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பேருந்து, கீழப்பாலம் என்ற பஸ் நிறுத்தத்தில், தட்டான்கோவில் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சிவமணி என்பவர் கூலி வேலை முடித்து கொண்டு வீடு திரும்ப பேருந்தில் முன்பக்க படியில் ஏற முயன்ற போது கீழே தடுமாறி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து, சிவமணி (43) உடல் எடுத்துச்செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சம்பவம் குறித்து மன்னார்குடி தாலுக்கா போலீசார் பேருந்து ஓட்டுனர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்த சிவமணிக்கு மனைவி கலாராணி மற்றும் திருமண வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர் கூலி வேலை முடித்துக்கொண்டு வீட்டிற்கு செல்ல பேருந்தில் ஏற முயன்ற கூலி தொழிலாளி பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெருத்த சோகத்தை ஏற்படுத்தியது.























