திருவள்ளூர், ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்..
திருவள்ளூர் மாவட்டம், பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இதுவரை 6 முறை வந்துள்ளார் எனவும் மேல்ம் இன்னும் 2 முறை தமிழ்நாட்டிற்கு வர இருப்பதாகவும் தெரிவித்த அதற்கான காரணம் அவருக்கு வந்துள்ள தேர்தல் பயமே என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மோடியின் தமிழ்நாடு வருகை குறித்து விமர்சனம் செய்துள்ளார்.
திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியின் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைப்பெற்றது.
அதில் பங்கேற்று பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ..
இந்தியா முழுவதும் ஆட்சி மாற்றம் ஏற்படும் சூழல் பிரகாசமாக உள்ளதாகவும். மேலும் தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியாக மக்களிடையே ஆதரவு பெற்றிருப்பதால் அதைக் கண்டு மோடிக்கு ஜுரம் வந்துவிட்டதாகவும். உத்திர பிரதேசத்தில் ராகுலும் அகிலேஷ் யதாவும் நடை பயணம் ஒன்றிணைந்து சென்றதால் இந்த முறை நிச்சயம் 60 நாடாளுமன்ற தொகுதியை இந்தியா கூட்டணி அம்மாநிலத்தில் கைப்பற்றும் எனவும், அதனைப் போன்று பீகாரிலும் 35 இடங்களில் இந்தியா கூட்டணி 33 இடங்களிலும் பாஜக இரண்டு இடங்களிலும் மட்டுமே வெல்ல முடியும் எனவும், மேலும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சி அங்கேயும் இந்தியா கூட்டணி வெள்ள வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் வந்துள்ளதாகவும். ஆக மொத்தம் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இந்த முறை 150 லிருந்து 160 இடங்கள் மட்டும்தான் வெல்ல முடியும் என்று அப்போது அவர் பேசினார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர் உலக நாடான அமெரிக்கா 2016 இல் மோடி ஆட்சி வரப்போகிறது என்று கூறியது ஆனால் தற்போது மோடி ஒழிய வேண்டும் என சொல்கிறது என்றால் இம்முறை மோடி ஆட்சி தோல்வியடையும் எனவும் காங்கிரஸ் ஆட்சி வருவது உறுதி என்று அவர் கூறினார் அதில் திருவள்ளுவர் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் வெற்றியை பெற்று அமைச்சர் ஆவது உறுதி எனவும் அப்போது மேலும் தெரிவித்தார்.
இன்று ரொம்ப துள்ளும் ஆட்டுக்குட்டி அன்று கர்நாடகாவில் இந்த ஐஏஎஸ் அதிகாரிக்கு கீழ்தான் வேலை செய்தது. இப்போது இங்கு வந்து இந்த ஆட்டுக்குட்டிக்கு இவ்வளவு ஆட்டம் போடுகிறது என்று அண்ணாமலையை கடுமையாக விமர்சித்தார்.



















