மயிலாடுதுறை, ஏப். 25 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…

மயிலாடுதுறை மாவட்டம்,. புத்தூர்,  கொள்ளிடம், சீர்காழி, செம்பனார் கோயில் மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில், கோடை வெப்பத்தை தனிக்க மக்களுக்கு நீர்மோர் பந்தல் அமைக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்திரவின் பேரில்,  அ.தி.மு.க.. மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுண்ராஜ் ex M.L.A., கொள்ளிடம், புத்தூர், சீர்காழி வைத்தீஸ்வரன் கோயில், செம்பனார் கோயில், மயிலாடுதுறை ஆகிய பகுதிகளில் நீர்மோர் பந்தலை இன்று தொடங்கி வைத்தார்.

நீர்மோர் பந்தல் தொடக்க நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு, வெள்ளரிக்காய், தர்பூசனி , சர்பத், நீர் மோர் ஆகியவைகள் வழங்கபட்டது. அந்நிகழ்ச்சியில், அ.தி.முக முன்னாள் எம்.எல்.ஏக்கள், மற்றும் நகர ஒன்றிய பொருப்பாளர்கள், அ.தி.மு.க. பொருப்பாளர்களும், கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 100 டிகிரிக்கு மேல் வெயில் மக்களை வாட்டுவதால், பொதுமக்கள் பெருமளவில் ஆர்வத்தோடும், தாகத்தோடும், அ.தி.மு.க வழங்கும் நீர்மோர் பந்தலில் தாகத்தை தனித்து சென்றது. காண்போரை கோடை காலத்திலும் கண் குளிர வைத்தது குறிப்பிடதக்கது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here