கும்மிடிப்பூண்டி, மார்ச். 28 –
கும்மிடிப்பூண்டி அடுத்த பெரியஓபுளாபுரம் ஊராட்சி, நாகராஜ் கண்டிகை கிராமத்தில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து வீடுகள் கட்டப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருக்கு தொடர் புகார்கள் வந்ததைத் தொடர்ந்து இன்று கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ராமன் மற்றும் வருவாய் அலுவலர், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 2 வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றி நடவடிக்கை மேற்கொண்டனர்.





















