தஞ்சாவூர், ஏப். 04 –

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே.நாகராஜ்

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வாக்கெடுப்பில் இஸ்லாமியர்களுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் உரிமை கிடைக்காமல் போனதற்கு முழுமுதற் காரணம் அதிமுகதான் என திருவாரூரில் நடைப்பெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திருச்சி சிவா குற்றச்சாட்டு எழுப்பினார்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான  இந்தியா கூட்டணி சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வை.செல்வராஜை ஆதரித்து திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் பகுதியில் திராவிட முன்னேற்றக் கழக கொள்கை பரப்புச்செயலாளர் திருச்சி சிவா எம்.பி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது…

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய  பாஜக அரசு அமல்படுத்த முயற்சித்து நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த போது திமுக சார்பில் இலங்கை தமிழர்களையும் சேர்ப்பது, இஸ்லாமிய சகோதர சகோதரிகளை சேர்ப்பது, மதரீதியாக என்பதற்கு பதிலாக இன ரீதியாக சேர்த்துக் கொள்ளுங்கள் என மூன்று திருத்தங்களை கொண்டு வந்தோம். ஆனால் அப்போது திமுகவிற்கு ஐந்து உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 99 வாக்குகளும் அரசாங்கத்துக்கு ஆதரவாக கிடைத்த வாக்குகள் 124. வித்தியாசம் 25. இந்த 25ல் 13 ஓட்டுகள் அதிமுகவிற்கு உள்ளது. இந்த 13 வாக்குகளும் தீர்மானத்திற்கு திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களிக்கப்பட்டு இருந்தால் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் இலங்கை தமிழர்களுக்கும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் உரிமை கிடைத்திருக்கும். இலங்கை தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான இந்தப் படு பாதகமான  செயலை செய்த கட்சி அதிமுக என்பதை அனைவரும் ஞாபகம் வைத்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், நன்னிலம் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்ளிட்ட ஒன்றிய நகர பேரூர் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here