திருத்துறைப்பூண்டி, ஏப். 03 –
தம்பட்டம் செய்திகளுக்காக கே.நாகராஜன் மாவட்ட செய்தியாளர்
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே பள்ளாங்கோ கோயிலில் தேர்தல் பறக்கும் படையினர் கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது திருச்சியில் இருந்து வந்த காரை மறித்து சோதனை செய்த போது முறையான ஆவணங்கள் இன்றி ரூ. 74,600 கொண்டு வரப்பட்டது அச்சோதனையில் தெரிய வந்தது.
அதனை தொடர்ந்து அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் திருச்சி சேர்ந்த ரகமத்துல்லா என்பவர் பேன்சி வியாபாரம் செய்து வருபவர் எனவும் மேலும் அவர் வசூலுக்கு வந்ததாகவும் தெரிவித்தார். முறையான ஆவணங்கள் இல்லாதால் பணத்தை பறிமுதல் செய்து, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் தமிழ்மணி, தாசில்தார் கார்ல்மார்க்ஸ் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.





















