நேற்று கொளத்தூர் எவர்வின் பள்ளியில் நடைப்பெற்ற அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் உரை ஆற்றும் போது திமுக தேர்தல் நேரத்தில் குறிப்பிட்ட அத்துனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம் என்று உறுதிமொழி அளித்தார்.
சென்னை, கொளத்தூர். ஆக 30 –
நேற்று சென்னை கொளத்தூர் தொகுதியில் எவர்வின் பள்ளியில் நடந்த அச்சீவர்ஸ் அகாடமியில் தையல் பயிற்சி முடித்த 353 மகளிருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு சான்றிதழ்களையும் தையல் இயந்திரங்களையும் வழங்கும் விழா நடைப் பெற்றது. பின்பு அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடையே உரையாற்றினார்.
அப்போது பெண்களுக்கான வாழ்வாதாரம், சுய மரியாதை, உரிமைகள், பாதுகாப்புகள் போன்ற அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டு வருவது திமுக ஆட்சி எனவும், ஏற்கனவே ஐந்து முறை கலைஞர் தலைமையில் இருந்த போது மகளிர் சுயவுதவி குழுவை ஏற்படுத்தி அவர்களுக்கு சுயமரியாதையுடன் வாழ்வதற்கான திட்டத்தை தருமபுரியில் 1989 ஆம் ஆண்டு ஏற்படுத்தி தந்தார். அது போன்று கற்பினி பெண்களுக்கான நலத்திட்டம், திருமண உதவி திட்டம், விதவைகள் மறுவாழ்வு திட்டம், சொத்துரிமை, பெண்களுக்கான உள்ளாட்சி அமைப்பில் 33 சதவீத இட ஒதுக்கீடு, வேலை வாய்ப்பில் 30 சதவீத ஒதுக்கீடு என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தந்துள்ளோம். என்பதை நினைவுப் படுத்தினார். அது போல் தற்போது 6 வது முறையாக எனது தலைமையில் பொறுப்பேற்று உள்ள திமுக ஆட்சி பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயணத் திட்டம் என எப்போதும் பெண்களின் முன்னேற்றத்தில் சிறப்பு கவனம் செலுத்தி பல நலத்திட்டங்களை செய்துள்ளோம், செய்வோம், செய்து கொண்டே இருப்போம்.. என உரையாற்றினார். மேலும் உரையாற்றும் போது ஏற்கனவே தேர்தல் வாக்குறுதிகளை கடந்த 100 நாட்களில் பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளோம் அது போன்றே அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் செய்து முடிப்போம் என்று இந்நேரத்தில் உங்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று உரை நிகழ்த்தினார். எந்த வாக்குறுதியும் விடுபடாது என உறுதிப்பட கூறினார். இந் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மின்சாரம் மற்றும் ஆயத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி மற்றும் பள்ளி மற்றும் அச்சீவர்ஸ் அகாடமி நிர்வாகிகள் அரசு உயர் அலுவலர்கள் என பல்வேறு பிரிவினர் இந் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.