கும்பகோணம், அக். 30 –
கும்பகோணம் அருகே பாபநாசம் பேரூராட்சியில் புதிய அன்னுகுடி வாய்க்கால் குடமுருட்டி ஆற்றின் தலைப்பிலிருந்து தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் துவக்கி வைத்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்,
கடைமடை பகுதி வரை உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று நவீன எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி தூர்வாரும் பணி நடைபெற்றது.
25 ஆண்டுகளுக்குப் பிறகு பாபநாசம் புதிய அன்னுகுடி வாய்க்கால் தூர்வாரும் பணியை மேற் கொண்டதற்கு விவசாயிகள், பொதுமக்கள் மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டு தெரிவித்தனர். தூர்வாரும் பணியின் போது பொதுப் பணித்துறை, செயற் பொறியாளர் சொர்ணகுமார், உதவி செயற் பொறியாளர் மாரிமுத்து, உதவி பொறியாளர் பார்த்தசாரதி, மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் மாஹின் அபுபக்கர், கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் ராம்குமார், பாபநாசம் வட்டாட்சியர் மதுசூதனன், மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற் பொறியாளர் ராஜா, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலர் கார்த்திகேயன், பாபநாசம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் பூரணி, ஆய்வாளர் அழகம்மாள், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.