தஞ்சாவூர், ஏப். 12 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள சோலைப்பூஞ்சேரி கிராமம் கீழத் தெருவில் வசித்து வருபவர்கள் தமிழரசன் (35)  ரேவதி (26) தம்பதியினர் மேலும் அவர்களுக்கு 14  வயதில் ஆண்மகனும், 10 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.

மேலும் தமிழரசன் அப்பகுதியில் டிராக்டர் டிரைவராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல இன்று காலை தமிழரசன் கிடங்காநத்தம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவருக்கு சொந்தமான வயலில் உழுது கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் சேற்றில் தலைகீழாக கவிழ்த்து விபத்துக்குள்ளானது. அதில் சேற்றுக்கு அடியில் தமிழரசன் சிக்கினார். அத்தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் காவல்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் தமிழரசனை மீட்டு அருகில் உள்ள மெலட்டூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே தமிழரசன் உயிரிழந்து விட்டதாக கூறிவுள்ளனர். அதனைத் தொடர்ந்து அவ்விபத்துக் குறித்து வழக்குப் பதிவி செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here