இராமநாதபுரம், ஆக.12-

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியம் பெரியபட்டிணத்தில் குரு மருத்துவமனை மற்றும் பெரியபட்டிணம் ஊராட்சி இணைந்து நடத்திய குழந்தையில்லா தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்கள் மற்றும் பல் சிகிச்சைக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாம் நடைபெற்றது.

பெரியபட்டிணம் ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடந்த குழந்தை இல்லாத தம்பதிகள் மற்றும் கர்ப்பப்பை நோய்களுக்கான இலவச மருத்துவ ஆலோசனை முகாமில், ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.அக்பர் ஜான் பீவி  தலைமை வகித்தார். எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாவட்ட செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான பைரோஸ்கான், ஒன்றிய கவுன்சிலர் சுமதி ஜெயக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர்.

வார்டு உறுப்பினர்கள் பீர்மைதீன், நாகலட்சுமி, எஸ்.டி.பி.ஐ தொகுதி செயலாளர் பீர்முகைதீன், நகர் தலைவர் முகம்மது சலீம், மீனவர்கள் கூட்டுறவு சங்கம் துணை தலைவர் அக்பர் அலி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

குழந்தையின்மை மற்றும் மகளிர் நல சிறப்பு மருத்துவர் கல்பனா மற்றும் பல் மருத்துவர் ஜெமிலுன் நிஷா ஆகியோர் பயனாளிகளை பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

இம் முகாமில் குழந்தை இல்லாதவர்கள், மாதவிடாய் நின்ற பின் குழந்தை வேண்டுபவர்கள், கருத்தடை செய்தபின் குழந்தை வேண்டுபவர்கள், விந்தணு குறைபாடு உள்ள ஆண்கள், நீர்க்கட்டி, கர்ப்பப்பை கட்டி, சினைப்பையில் கட்டி உள்ளவர்கள், கருமுட்டை குறைபாடு உள்ளவர்கள், மாதவிடாய் பிரச்சனைக்குரியவர்கள் (வயது:14-45), மாதவிடாய் நின்ற பின் இரத்தப்போக்கு, கருப்பை புற்றுநோய், அதிக இரத்தப்போக்கு, மாதவிடாய் இடையில் இரத்தப்போக்கு, வெள்ளைப்படுதல், மார்பக புற்றுநோய், சினை முட்டை புற்றுநோய், மாதவிடாய் போது அதிக வலி, மற்றும் கர்ப்பப்பை இறக்கம் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள 200-க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். விழாவிற்க்கான ஏற்பாடுகளை எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரியாஸ்கான், ஊராட்சி செயலாளர் சேகு ஜலாலுதீன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here