கும்பகோணம், ஜன. 3 –
கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடையில் 6 ம் ஆண்டு தொலைதூர பாரம்பரிய புறா பந்தய போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் தஞ்சாவூர், பாபநாசம், ஜெயங்கொண்டம், திருவிடைமருதூர், திருவையாறு ஆகிய ஊர்களிலிருந்து இந்தப் போட்டியில் 400க்கும் மேற்பட்ட புறாக்கள் பண்டார வாடையிலிருந்து ஆந்திர மாநிலம் சித்தூருக்கு கொண்டு சென்று அங்கிருந்து புறா பந்தயம் தொடங்கி புறாக்களை பறக்க விடுவார்கள்.
அப்புறாக்கள் அங்கிருந்து வளர்க்கப்படும் இடங்களுக்கு எந்த புறா முதலில் வருகிறதோ .. அந்த புறா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். புறா வளர்ப்பவர்கள் வீட்டிலேயே இருப்பார்கள் தங்கள் புறா வந்தடைந்ததும் வளையத்தில் ஒட்டப்பட்டிருக்கும் அடையாள எண்ணை பார்த்து அதை அந்த அப்ளிகேஷனில் பதிவு செய்து விடுவார்கள் .
இதில் எந்த புறா முதலில் சென்றது என்பதை அறிந்து போட்டி நடைபெறும் போட்டி நடுவர் வெற்றி புறாவை அறிவிப்பார் வெற்றி பெற்ற புறாவுக்கு விழா நடத்தி கோப்பை சான்றிதழ் கொடுக்கப்படும். ஜல்லிக்கட்டு. சேவல் சண்டை போலவே, புறா பந்தயம் பாரம்பரிய விளையாட்டு தான் என்றும் இதை ஊக்குவிக்க அரசு தனி கவனம் செலுத்த வேண்டும் என்று போட்டி புறா வளர்ப்போர் சங்கத்தை சார்ந்தவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
பேட்டி
புறா சங்க பொறுப்பாளர் ஹாஜாநஜ்முதீன்






















