ராமநாதபுரம், ஆக.14-
ராமநாதபுரம் தேவிபட்டினம் ரோடு கிழக்குக் கடற்கரைச் சாலையில் கருடா கார்ஸ் திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
கார் ஷோரூமை மூத்த வழக்கறிஞர் கிருபாகரன் சேகர் திறந்து வைத்தார் திறப்பு விழாவில் புதுக்கோட்டை எய்ம்ஸ் கார்ஸ் நிறுவன உரிமையாளர் கிருஷ்ணன் காளிதாஸ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கருடா கார்ஸ் ஷோரூம் உரிமையாளர் வெங்கடேசன் வரவேற்றார். இங்கு அனைத்து முன்னணி நிறுவனங்களின் கார்கள் குறைந்த பட்ஜெட் முதல் அதிக பட்ஜெட் வரையிலான நல்ல தரத்துடன் கூடிய பயன் படுத்திய கார்கள் விற்கப்படுகிறது. அனைத்து முன்னணி நிதி நிறுவனங்கள் மூலம் கார் வாங்குவதற்கு கடன் பெற்று தரப்படும் அனைத்து விதமான கார்களுக்கும் எக்ஸ்சேஞ்ச் வசதிகளும் உண்டு. இந்த நிறுவனத்தில் வாங்கும் கார்களுக்கு சர்வீஸ் ரெக்கார்டு இன்சூரன்ஸ் ரெக்கார்டு போலீஸ் ரெக்கார்டு ஆகியவை சரிபார்த்து விற்பனை செய்வதுடன் விரைவான ஆர்டிஓ சேவைகளும் செய்து தரப்படுகிறது என ஷோரூம் உரிமையாளர் வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.