தங்கானூர், சனவரி. 28 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன் …

திருவள்ளூர் மாவட்டம், தங்கானூரில் தைப்பூசத்தை முன்னிட்டு  வெற்றுக்கால் சேவல் சண்டை போட்டி நடைப்பெற்றது. அப்போட்டியில் நடிகர் தனுஷுடன் ஆடுகளம் திரைப்படத்தில் நடித்த சேவல் உட்பட 700 -க்கும் மேற்பட்ட சேவல்கள் களத்தில் ஆக்ரோஷமாக ஒன்றோடு ஒன்று மோதி விளையாடியது. அதனால் தங்கனூர் கிராமம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

மேலும் தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளில் ஒன்றான சேவல் போட்டி தற்போது அழியும் தருவாயில் உள்ளது. மேலும் அப்போட்டிகளில் பங்கேற்கும் சண்டை சேவல் இனத்தை பாதுகாக்கும் விதமாக  ஆண்டு தோறும் திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தில் நீதிமன்ற அனுமதியுடன் கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சேவல் சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.

அதுப்போன்றே நடப்பாண்டும் அச் சேவல் சண்டை போட்டியினை நடத்திட இரண்டு தினங்கள் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்ததைத் தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்டம் தங்கானூர் கிராமத்தில் தைப்பூசம் திருநாளை முன்னிட்டு நேற்றும் இன்றும் நடைப்பெற்று வருகிறது. மேலும் விழாக்குழுவினர் நீதிமன்றத்தின் கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து வெகுச்சிறப்பாக நடத்தி வருகின்றனர்.

போட்டியின் போது சேவல்களின் காலில் கத்திகள் கட்டுவதும், மதுபானம் ஊற்றுவதும், சாதி மதம் தழுவிய பெயர்களை சூட்டி அழைப்பதும், கூடாது என நீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்த நிலையில் அந்நீதிமன்றத்தின் நிபந்தனைகளை போட்டியாளர்கள் மற்றும் விழாக்குழுவினரால் கடைப் பிடிக்கப் பட்டுள்ளது.

மேலும் அப் போட்டியில் பங்கேற்கும் சேவலுக்கு கால்நடை மருத்துவர் பரிசோதனை செய்த பின்னாரே போலீசாரின் பாதுகாப்புடனயே சேவல்களை களத்தில் போட்டிக்கு இறக்கி விடப்படுகிறது

வெகுச்சிறப்பாக நடைப்பெற்று வரும் அப்போட்டியில் தமிழ்நாடு புதுவை உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமல்லாது, மகாராஷ்டிரா ,குஜராத், ஆந்திரா தெலுங்கானா, கர்நாடகா ,கேரளா ஆகிய 8 மாநிலங்களில் இருந்து வந்திருந்த சேவல்கள் போட்டியில் பங்கேற்று கால்நடை மருத்துவர்களின் பரிசோதனைக்கு பின்பு ஆரோக்கியத்துடனும் மிகுந்த ஆக்ரோஷத்துடனும் அச்சேவல்கள் ஒன்றொடு ஒன்று மோதி விளையாடி வருகின்றது..

இப்போட்டியில்  சண்டைக்கென உள்ள சேவல் மிகவும் பிரபலமான ஜாவா, கருப்பு வால். யாகுத், பீலா, தும்மர், சீதா, நூரி, காதர் பேட்டை மாதிரி, படிவகல்வா உள்ளிட்ட பத்து வகையான சண்டைச் சேவல்கள் களத்தில் இறங்கி போட்டிட்டு விளையாடி வருகின்றன.

மேலும் அப் போட்டிகளின் விதிமுறைப்படி மூன்று சுற்றுகளில் வெற்றி பெறும் சேவல்களுக்கு அதன் உரிமையாளருக்கு தங்க மெடல், சான்றிதழ் கேஸ் ஸ்டவ், போன்ற ஊக்குவிப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டு போட்டிகள் போன்று அழிந்து வரும் சேவல் சண்டை போட்டிகளுக்கும் ஊக்கப்படுத்தி பொங்கல் திருநாளை முன்னிட்டு நடத்த அரசு அனுமதி வழங்க வேண்டும் என்றும் சேவல் உரிமையாளர்கள் மற்றும் விழாக் கமிட்டியாளர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here