பொன்னேரி, மே. 30 –
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி ஆணைக்கிணங்க தமிழ்நாட்டில் தொடரும் ஊழல் முறைகேடுகள், பெருகி வரும் கள்ளச்சாராய விற்பனை, போலி மதுபானங்களினால் இறப்பு, சட்ட ஒழுங்கு சீர்கேட்டால் தொடர்ந்து நடைப்பெற்று வரும் கொலை, கொள்ளை போன்றவற்றை கட்டுப்படுத்த தவறிய திமுக அரசின் திறன ற்ற அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் அக்கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அண்ணா சிலை அருகே திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் பொன்னேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம்.பி.பலராமன் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டு கண்டனத்தை தெரிவித்தனர், மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார், மீஞ்சூர் ஒன்றிய அதிமுக செயலாளர் நாலூர் முத்துக்குமார், சோழவரம் ஒன்றிய செயலாளர் பிரகாஷ், பொன்னேரி நகர அதிமுக செயலாளர் செல்வகுமார், பானு பிரசாத், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், நகர ,பேரூர் அதிமுக நிர்வாகிகள், மகளிர் அணியினர், இளைஞர்கள் அணி தொண்டர்கள் என பலர் கலந்துக் கொண்டனர்.



















