சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
சென்னை:

பாராளுமன்றத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது..
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஐ.ஜே.கே. கட்சிகளும் உள்ளன. அந்த கட்சிகளுக்கு அதிகாரப்பூர்வமாக தொகுதிகள் ஒதுக்கப்படாமல் இருந்தது. திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.
ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி தலா 2 தொகுதிகளையும் கேட்டு வந்தன.
இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின் முடிவில், இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

அதன்பின்னர் மதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இந்த பேச்சுவார்த்தையின்போது, மதிமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்க முடிவு செய்யப்பட்டதாக முதலில் தகவல் வெளியானது.

ஆனால், பேச்சுவார்த்தைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வைகோ, பேச்சுவார்த்தை நாளையும் தொடரும் என்றும், மதிமுகவுக்கான தொகுதிகள் எத்தனை என்பது நாளை மாலை இறுதி செய்யப்படும் என்றும் கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here