மீஞ்சூர், ஏப். 03 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதிக்கு உட்பட்ட மீஞ்சூரில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் சார்பில் இந்தியா கூட்டணியின் திருவள்ளூர் (தனி) தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கை சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்கும் தெருமுனை கூட்டம் நடைபெற்றது.

மேலும் அக்கூட்டத்திற்கு சிபிஐஎம் மீஞ்சூர் பகுதி செயலாளர் ஜெயவேலு தலைமை வகித்தார், சிஐடியு மாநில துணைத்தலைவர் கே.விஜயன், ஒன்றிய பெருந்தலைவர் ஜி.ரவி, நகர திமுக செயலாளர் தமிழ்உதயன், பேரூராட்சி மன்றத் தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத் தலைவர் அலெக்சாண்டர், தொ.மு.ச தலைவர் சசிகுமார், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

அக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக சிஐடியு மாநில தலைவர் ஏ.சௌந்தரராஜன். திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை சந்திரசேகர் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு மத்திய பாஜக அரசை கண்டித்தும். திமுக அரசின் திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துரைத்தும், காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்திலுக்கு கை சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தனர்.

அதில் திமுக, காங்கிரஸ், சிபிஐ எம், சிஐடியு, விடுதலை சிறுத்தைகள் ,முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மதிமுக, உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சியினர். மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர்.முன்னதாக கூட்டணி கட்சியினர் சார்பில் திமுக நகர கழக செயலாளர் தமிழ்உதயன் தலைமையில் கை சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் பேரணி நடைபெற்றது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here