காஞ்சிபுரம், மார்ச். 02 –

பஞ்சபூதத் தலங்களில் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் இதில் முதல் ஸ்தலங்களாக நிலம் (மண்) இருப்பது தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமை வாயந்த கோவில் நகரமாக இருப்பது காஞ்சிபுரம் இந்த காஞ்சிபுரம் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட சிவன் கோவில்கள் உள்ளது.

  இந்த சிவராத்திரி அன்று இரவு முழுவதும் விரதம் இருந்து தூங்காமல் சிவபெருமானை மக்கள் வழிபடுவார்கள். காஞ்சிபுரத்தில் இருக்கும் சிவன் கோவிலை வழிப்பட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும் வருகை தந்துள்ளனர்.

  காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் சிவனை தரிசனம் செய்துவிட்டு, அடுத்ததாக கைலாசநாதர் கோவில், கச்சபேஸ்வர் கோவில் என அடுத்தடுத்து சிவன் கோவிலை தரிசனம் செய்து வருகின்றனர்.

  கடந்த இரண்டு  ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அரசு பல்வேறு கட்டுபாடுகள் விதித்ததின் காரணமாக மஹா சிவராத்திரி சிறப்பாக நடைபெறவில்லை

  இந்த ஆண்டு சில கட்டுபாடுகளில் இருந்து அரசு தளர்வு அளிக்கப்பட்டதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு மஹா சிவராத்திரி காஞ்சிபுரத்தில் சிறப்பாக நடைப்பெற்றது.

  மஹா சிவராத்திரியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்தனர்.

 மேலும், காஞ்சிபுரம் மூங்கில் மண்டம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் மஹா சிவராத்திரியை முன்னிட்டு அமர்நாத் பனி லிங்க அலங்கார தரிசனம் நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த அலங்கார தரிசனமான முதல் நாளிலேயே அதிக மக்கள் வருகை தந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here