செய்தி சேகரிப்பு ஆவடி ராஜன்
இன்று அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் லகு உத்யோக் பாரதி அமைப்பின் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி நடைப் பெற்றது. அதில் கலந்துக்கொண்டு பேசிய இணை பொது செயலாளர் டாக்டர். வேற்செழியன் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கிஷான் கடன் அட்டை போல் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் அரசு வழங்க வேண்டும் என்றார்.
அம்பத்தூர், செப். 4 –
ஒட்டுமொத்த இந்திய பொருளாதாரத்தில் GDP யில் MSME யின் பங்கு 60% உள்ளது அடுத்த நகர்வுக்கு MSME உயர அரசு உதவ வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் நடப்பு ஆண்டு முதல் பட்ஜெட்டிலேயே திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதியில் புதிய தொழில் பூங்கா அமைக்க உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் நிதியமைச்சர் அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு லகு உத்யோக் பாரதியின் சார்பில் மனமார்ந்த நன்றி.
சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான தேசிய சேவை அமைப்பாக லகு உத்யோக் பாரதி அமைப்பு கடந்த 1994 ல் துவங்கி 26 ஆண்டுகளாக காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 26000 உறுப்பினர்களோடு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பில் 2021-2023 ஆண்டுக்கான தமிழ்நாடு பிரிவிற்கான மாநில நிர்வாகிகள் அறிமுக நிகழ்ச்சி அம்பத்தூரில் உள்ள தேசிய உற்பத்தி திறன் மேம்பாட்டு பயிற்சி மைய கூட்ட அரங்கில் நடைப் பெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்த அமைப்பின் இணை பொது செயலாளர் Dr. வேற்செழியன் செய்தியாளர்களிடம் கூறும்போது,
சென்னை கோயம்புத்தூர் திருப்பூர் போன்ற பெருநகரங்களில் தான் தொழில் வளர்ச்சி இருப்பதாகவும்
கிராமப்புறங்களில் ராம்நாடு, திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் தொழிற்சாலைகள் ஏற்படுத்தப்பட்டால் அந்த பகுதி கிராம இளைஞர்களுக்கும் அந்த கிராமத்தில் படித்த வேலை இல்லாத இன்ஜினியருக்கு வேலை கிடைக்கம் என்று லகு உத்தியோக் பாரதி சார்பில் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தோம்
இந்த முதல் பட்ஜெட்டிலேயே திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் பகுதியில் தொழில்பூங்கா அமைக்க உள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் நிதியமைச்சர் அவர்களும் தெரிவித்திருக்கிறார்கள். அதற்க்கு, லகு உத்யோக் பாரதியின் சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும்.
விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை வழங்கியிருப்பது போல சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கிரெடிட் கார்டு வழங்க வேண்டும். அனைத்து தொழில் நிறுவனங்களும் இதன் மூலம் பயனடைய வேண்டும்.
சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை நம்பிதான் நமது நாட்டு பொருளாதாரம் செயல்பட்டு வருகிறது நாங்கள் அடுத்த நகர்வுக்கு செல்ல நமது மத்திய மாநில அரசுகள் இந்த உத்தரவாதம் கொடுத்து அவர்களை கட்டாயம் ஊக்கப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
தொழில் நிறுவனங்களிடமிருந்து ஓராண்டுக்கு எந்த வரியையும் கேட்டு அரசு தொந்தரவு செய்யக்கூடாது என்று லகு உத்யோக் பாரதி அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.