திருவண்ணாமலை, செப்.4-

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அருகே அரசு பள்ளிகள் இரண்டு வருடங்கள் கழித்து திறக்கப்பட்டதை தொடர்ந்து திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை எம்பி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட தேவனாம்பட்டு ஊராட்சி மதுரா காட்டுப்புத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சி.என். அண்ணாதுரை எம்பி இவ்வாய்வினை மேற்கொண்டார். அப்போது பள்ளி வகுப்பறைகளையும் சமையலறையையும் அவர் பார்வையிட்டு பேசுகையில்  தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பள்ளி கல்லூரிகள் முதல் சினிமா தியேட்டர்கள் பொழுதுபோக்கு பூங்காக்கள் வரை மூடப்பட்டிருந்தது இதனால் பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர் இதன் எதிரொலியால் மாணவர்களாகிய நீங்களும் வீட்டிலேயே இருந்து வந்துள்ளீர்கள் தற்போது கொரோனா வைரஸ் தடுப்பூசி போடப்பட்டு ஓரளவு வைரஸின் தாக்கம் குறைந்துள்ளது மேலும் மாணவர்களாகிய உங்களின் எதிர்காலத்தை நினைவில் வைத்து தமிழக அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு மட்டும் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது இருப்பினும் உங்களுக்கு கல்வி எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு உங்களின் பாதுகாப்பும் முக்கியம் காரணம் 18வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டு வருகிறது ஆனால் உங்களுக்கு தடுப்பூசி போடப்படவில்லை இதனை கருத்தில் கொண்டு பள்ளிக்கு வரும் போது கட்டாயமாக முக கவசம் அணிந்து வர வேண்டும் மேலும் கைகளில் அடிக்கடி சானிடைசர்  போட வேண்டும் மேலும் மதியம் சாப்பிடும் போது கூட்டாக அமர்ந்து சாப்பிடுவதை தவிர்த்து, தனித்தனியே அமர்ந்து சாப்பிட வேண்டும் இப்படி ஒவ்வொன்றையும் கடைபிடித்தால் மட்டுமே வைரஸ் தாக்கத்தை குறைக்க முடியும் இவ்வாறு மாணவர்களிடையே தெரிவித்தார்.

பின்னர் சமையல் செய்யும் அறைக்குச் சென்று கடந்த இரண்டு வருடங்களாக பூட்டி வைத்துள்ளதால் அனைத்து பாத்திரத்தையும் சோப்பு போட்டு கழுவி சுத்தம் செய்த பிறகு சமைக்க வேண்டும் அதோடு மட்டுமல்லாமல் சுவர்களில் உள்ள ஒட்டடைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்று சத்துணவு அமைப்பாளரிடம் கேட்டுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து பள்ளியில் படிக்கும் 74 மாணவ மாணவிகள் அனைவருக்கும் முகக்கவசம் சானிடைசர் மற்றும் ஜாமென்ட்ரி பாக்ஸ் ஆகியவைகளை வழங்கினார். மேலும் பள்ளிக்கு என்னென்ன தேவை கழிவறைகள் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் குடிக்கும் தண்ணீரின் டேங்குகளை சுத்தம் செய்து பிளிச்சிங் பவுடர் போடவும் ஆசிரியர்களிடம் அறிவுறுத்தினர்.

மேலும் துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து பள்ளிகளிலும் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் குழு ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களின் வெப்பநிலை பரிசோதித்து பள்ளிக்கு அனுப்பினர். ஆய்வின்போது தலைமையாசிரியர் இஸ்மாயில், ஒன்றியக்குழு உறுப்பினர் சிவராமன் ஊராட்சி மன்ற தலைவர் கௌரி காசிநாதன், டாக்டர் முல்லைவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here