செங்கல்பட்டு, நவ. 13 –

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் வங்கக்கடலில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகவும், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழையால் குடியிருப்பு மற்றும் போக்குவரத்து சாலைகளில் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.

அதனைப் போன்று செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியம் விட்டிலாபுரம் கிராமத்திலும் வீடுகளில் அதிக மழைநீர் புகுந்து அவ்வூர் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், அதிலும் குறிப்பாக இருளர் சமுதாய மக்கள் பெரும் சிரமத்தில் இருந்து வருவதை அறிந்து அவர்களுக்கு உதவும் வகையில் நேற்று , சட்ட உரிமை நீதி பாதுகாப்பு சங்க தேசியத் தலைவர் டாக்டர் தமிழன் மு.ஜெகன் அறிவுறுத்தலின் படி அதன் தேசிய தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் ராகோத் வழிகாட்டுதலின் படி செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் அன்சாரி செந்தில் தலைமையில் திருக்கழுக்குன்றம் ஒன்றிய பொருளாளர் அன்பழகன் அரசுப் பள்ளியில் பாதுகாப்பாக இருக்க வைக்கப்பட்டுள்ள இருபதுக்கும் மேற்பட்ட இருளர் சமுதாய மக்களுக்கு மதிய உணவு மற்றும் மாலையில் தேநீர் மற்றும் பிஸ்கெட் வழங்கினார்கள்.

மேலும், இதனைத் தொடர்ந்து அந்த மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு அவர்களுக்கு குடியிருக்க மாற்று இடம், மற்றும் பட்டா பெற்று கொடுக்குமாறு கிராமத்தின் பஞ்சாயத்து தலைவர், துனைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள், ஒன்றிய கவுன்சிலர் மற்றும் பொதுப்பணி துறை அதிகாரிகளையும் நேரில் அழைத்து சென்று பார்வையிட வைத்து மனு கொடுத்தனர். இந்நிகழ்வின் போது இச்சங்கத்தில் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்றுள்ள சரண்குமார், மற்றும் கிராம பொது மக்கள் உடனிருந்தனர். இத்தகவலை அச்சங்கத்தின் திருக்கழுக்குன்றம் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு மூ.ராஜசேகர் தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here