காஞ்சிபுரம், மார்ச். 16 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்

ஆசியாவின் மிகப்பெரிய மருத்துவ குழுமமான அப்போலோ மருத்துவமனை சார்பில் புதியதாக தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் காஞ்சிபுரத்தில் துவக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு அப்போலோ தகவல் மற்றும் மருத்துவ சிகிச்சை மையம் சார்பில் எலும்பு மூட்டு சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

மேலும் அம் மருத்துவ சிகிச்சை  முகாமில் அப்போலோ மருத்துவ மனையின் எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர் குணால் பட்டேல் கலந்துக் கொண்டு எலும்பு நோய் சம்பந்தமாக சிகிச்சை பெற வந்த பொது மக்களுக்கு, எலும்பு மூட்டு தேய்மானம் குறித்தும், நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.மேலும் அந் நிகழ்வில் அவர் சிறப்புரை நிகழ்த்தினார்.

மருத்துவ முகாமில் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட எலும்பு சம்பந்தமான நோயாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here