குழந்தை ஏக்கத்தில் மருத்துவமனையிலிருந்து குழந்தையை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
தஞ்சை, அக். 9 –
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை காலனித் தெருவைச் சேர்ந்தவர் விஜி என்பவர் இவருக்கு திருமணமாகி வெகு ஆண்டுகளாக குழந்தை இல்லாததால், தான் கற்பம் தரித்திருப்பதாக கூறி வயிற்றில் தலையணை வைத்து ஊரையும் உறவுகளையும் ஏமாற்றி வந்துள்ளர்.
மேலும், இந்நிலையில் தான் பிள்ளைப் பேறுக்காக தஞ்சை அரசு மருத்துவ மனைக்கு செல்வதாக கூறிவிட்டு, தஞ்சையில் உள்ள ராசா மிராசுதாரர் மருத்துவ மனையில் குழந்தை பேறு கொண்ட குணசேகரன், ராஜலட்சுமி தம்பதியர்களிடம் தனை அறிமுகம் செய்து கொண்டு, ராஜலட்சுமிக்கு உதவுவது போல் நடித்து அவரின் குழைந்தையை மருத்துவ மனையில் இருந்து திருடி வந்துள்ளார்.
காணாமல் போன குழந்தை குறித்து காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்ததின் பேரில், ராஜலட்சுமியிடம் உதவி செய்வது போல் நாடகமாடி குழந்தையை திருடிச் சென்ற விஜி என்கின்ற விஜியை போலீசார் கைது செய்து அவரிடமிருந்து குழந்தையை மீட்டு பெற்றோரிடம் காவல் கண்காணிப்பாளர் ரவிளிப்பிரியா ஒப்படைத்தார்.