கும்பகோணம், மார்ச். 16-

தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் 7ஆம் ஆண்டை முன்னிட்டு நேற்று செட்டிமண்டபம் அருகில் பட்டாசு வெடித்தும் அக்கட்சியின் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவுவினை அக்கட்சியின் சார்பில் வழங்கினார்கள்.

அந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார், கார்த்திகேயன், விஜய்பாலன், உதயகுமார், அம்மா பேரவை இணைச் செயலாளர் குருமூர்த்தி, வர்த்தக அணி துணைச் செயலாளர் அக்ரி சரவணன், பகுதி செயலாளர்கள் ரொசரியா, ஆரோக்கியராஜ், ஜம்பு என்கிற சண்முகம், மதியரசன், சேதுராமன், சார்பு அணி செயலாளர் இளவரசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கோபால் தேவர், லதா, ராஜா, காமராஜ், ஆல்பா குமார், சாக்கோட்டை நடுப் பிள்ளை, மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

.அதில் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரங்கசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசிய போது, புரட்சித் தலைவி அம்மா அவர்களின் புகழைக் காக்கவும், துரோகக் கூட்டங்களை தோலுரித்துக் காட்டவும் உருவாக்கப்பட்ட நமது அம்மாமக்கள் முன்னேற்றக் கழகம் தொண்டர்களின் இதயமாக, தமிழக மக்களின் நம்பிக்கையாக, தமிழ்நாட்டின் எதிர்காலமாக ஏற்றமிகு ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.

புரட்சித் தலைவி அம்மா அவர்களின் லட்சோப லட்சம் உண்மைத் தொண்டர்களின் முன்னிலையில் கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் 15 ஆம் தேதி மதுரை மாவட்டம் மேலூரில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்டது. என்று தெரிவித்தார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here