தஞ்சாவூர், மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சாரு..
கரிகால்சோழன் வழிப்பட்ட தஞ்சை அருள்மிகு கருணாசாமி கோவில் வைகாசி விசாக பெருவிழாவை ஓட்டி ஏழூர் பல்லக்கு தஞ்சை வீதிகளில் வலம் வந்தன. வழிநெடுக நின்று மக்கள் வழிப்பட்டனர்
தஞ்சை கரந்தையில் அருள்மிகு. பெரியநாயகி அம்பாள் உடனுறை வஷி ஸ்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. கரிகால் சோழனால் வழிபட்ட இக்கோவிலின் வைகாசி விசாக பெருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்வான ஏழூர் பல்லக்கு திருவிழாவை ஓட்டி அலங்கரிக்கப்பட்ட வெட்டிவேர் பல்லக்கில் அருந்ததி வஷிஸ் டேஸ்வரர் எழுந்தருள கண்ணாடி பல்லக்கில் பெரியநாயகி கருணா சுவாமி எழுந்தருள கோவிலில் இருந்து புறப்பட்டு கருந்திட்டைக்குடி, திருத் தென் திட்டை குடி, கடகடப்பை, திருவெண்ணாறு, திருக்கூடலம்பதி, திருப்புன்னைநல்லூர், பூமாலை வைத்தியநாதன் கோவில் ஆகிய ஏழுபகுதிகளுக்கு வலம் வருகிறது.
கீழவாசல் வெள்ளை விநாயகர் ஆலயத்தில் பல்லக்கில் வலம் வந்த சுவாமிகளுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது சுவாமிகளுக்கு பட்டு அங்கோ ஸ்த்வரம் போர்த்தி அலங்கார தீபம் காட்டப்பட்டன. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிப்பட்டனர்.





















