சிரியாவில் பயங்கரவாதிகள் அதிரடி தாக்குதலில் 33 ராணுவ வீரர்கள் பலி
பெய்ரூட்:
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அல் கொய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் வசம் இருந்த பகுதிகள் அரசு படையினரால் மீட்கப்பட்டு வருகிறது. இட்லிப் பகுதியில் ஹமா மற்றும் அலெப்போவின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் ஹயாத் தாகிர் அல்- ஷாம் என்ற பயங்கரவாத அமைப்பின் பிடியில் உள்ளன.
ஹயாத் தாகிர்...
நேபாளத்தில் ஹெலிகாப்டர் விபத்து -மந்திரி உள்பட 6 பேர் பலி
காத்மாண்டு:
நேபாள நாட்டின் டேராதும் மாவட்டத்தில் சுற்றுலாத்துறை மந்திரி ரபீந்திரா அதிகாரி உள்பட 6 பேர் ஒரு ஹெலிகாப்டரில் பயணம் செய்தனர்.
அந்த ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ரபீந்திரா அதிகாரி உள்பட அதில் பயணம் செய்த 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்...
வெனிசுலா அதிபர் மதுரோவின் நாட்கள் எண்ணப்படுகின்றன-அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை
கராகஸ்:
வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் குழப்பமும் தொடர்ந்து நீடிக்கிறது. வெனிசுலாவின் இடைக்கால அதிபராக தன்னை அறிவித்துக்கொண்ட ஜூவான் குவைடோவுக்கு பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்ததால், அந்த நாடுகளிடம் இருந்து மனிதாபிமான உதவிகளை பெற அதிபர் நிகோலஸ் மதுரோ மறுக்கிறார்.
ஆனால் உதவி பொருட்களை கொண்டு வரும்...
பிளாட்பார்ம் தடுப்பில் மோதி ரெயிலில் தீவிபத்து-20 பேர் பலி
கெய்ரோ:
எகிப்து தலைநகரான கெய்ரோ ரெயில் நிலையத்தில் இன்று காலை மின்சார ரெயில் வந்து கொண்டிருந்தது. பிளாட்பார்மில் உள்ள தடுப்பில் வேகமாக மோதியது.
இந்த விபத்தில் ரெயிலில் திடீரென தீ பற்றியது. இந்த தீ மளமளவென பரவியது. இதில் சிக்கி 20 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும், 40க்கு...
பயங்கரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்-பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வலியுறுத்தல்
வாஷிங்டன்:
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஜம்மு காஷ்மீரில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை அழிக்கும் நடவடிக்கையை இந்திய ராணுவம் மேற்கொண்டது. நேற்று இந்திய விமானப்படை விமானங்கள், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாமை குறிவைத்து சரமாரியாக...
பல்கேரியா-இந்தியா உறவுகளை மேம்படுத்த சுஷ்மா சுவராஜ் ஆலோசனை
சோபியா:
இந்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் பல்கேரியா, மொராக்கோ, ஸ்பெயின் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
முதல்கட்டமாக நேற்று பல்கேரியா தலைநகர் சோபியா வந்தடைந்த அவர் பல்கேரியா வெளியுறவுத்துறை மந்திரி எக்கடெரினா ஸ்ஹரியேவா-வுடன் இருநாடுகளுக்கு இடையிலான பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
குறிப்பாக, எட்டாம் நூற்றாண்டு முதல் இந்தியாவுடன்...
தாய்லாந்து தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் திருநங்கை
பாங்காக்:
தாய்லாந்தில் அடுத்த மாதம் (மார்ச்) 24-ந்தேதி நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்காக அங்குள்ள பிரதான கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளன. இதில் நாட்டின் பிரபல கட்சிகளில் ஒன்றான மகாசோன் கட்சி, பவுலின் காம்ப்ரிங் (வயது 52) என்ற திருநங்கையை பிரதமர் வேட்பாளராக நிறுத்தி உள்ளது. கடந்த...
அமெரிக்கர்கள் பாகிஸ்தான் செல்ல வேண்டாம்-டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தான் தனது மண்ணில் உள்ள பயங்கரவாதிகளை ஒடுக்குவதில் பாரபட்சம் காட்டுவதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத நடவடிக்கைகள் பெருகி வருவதால் அமெரிக்க மக்கள் அங்கு செல்வதை தவிர்க்க வேண்டுமென ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அந்நாட்டு விமான போக்குவரத்து...
அமெரிக்காவில் குற்றம் செய்யாமல் 39 ஆண்டு தண்டனை அனுபவித்தவருக்கு ரூ.150 கோடி இழப்பீடு
கலிபோர்னியா:
அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்தவர் கிரைக் கோலே (71). கடந்த 1978-ம் ஆண்டு தனது காதலி ரோன்டா விச்ட். அவரது 4 வயது மகன் டொனால்டு ஆகிய 2 பேரை கொலை செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. தான் குற்றவாளி இல்லை என அவர் வாதிட்டார்.
இருந்தும், அவருக்கு...
கென்யாவில் ஹெலிகாப்டர் விபத்து- 4 அமெரிக்கர்கள் உட்பட 5 பேர் பலி
நைரோபி:
கென்யாவின் வடமேற்கு பகுதியில் உள்ள துர்கானா எரியின் நடுவில் தீவு அமைந்துள்ளது. இந்த தீவில் உள்ள தேசிய பூங்காவை சுற்றிப் பார்ப்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். ஹெலிகாப்டர்கள் மூலம் சுற்றுலாப் பயணிகள் அழைத்து வரப்படுகின்றனர்.
இந்நிலையில், நேற்று மாலை இரண்டு ஹெலிகாப்டர்களில் தேசிய பூங்காவிற்கு சுற்றுலாப் பயணிகள்...



















