இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்
புதுடெல்லி:
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம்...
வங்காளதேச அணிக்கெதிரான டெஸ்ட்: நியூசிலாந்து அணியில் சுழற்பந்து வீச்சாளர் டாட் ஆஸ்ட்லே
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை 0-3 என வங்காளதேசம் இழந்தது. இந்நிலையில் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது.
இதற்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுழற்பந்து...
துபாய் டென்னிஸ்: அரைஇறுதியில் ஸ்விடோலினா-ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
துபாய் சர்வதேச டென்னிஸ் போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உக்ரைனின் எலீனா ஸ்விடோலினா 6-2, 6-3 என்ற நேர்செட் கணக்கில் நவரோவாவை (ஸ்பெயின்) வீழ்த்தி அரைஇறுதிக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு கால்இறுதியில் 3-ம் நிலை வீராங்கனையான சிமோனா ஹாலெப் அதிர்ச்சி...
உலகக்கோப்பையில் பாகிஸ்தானுடன் விளையாடுவது பற்றி இன்று முடிவு: கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு ஆலோசனை
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் இந்திய துணை ராணுவத்தினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வருகிற மே மாதம் தொடங்கும்...
55 பந்துகளில் 147 ரன்கள்- டி20 போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் சாதனை
இந்தூர்:
சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார்....
இந்திய கிரிக்கெட் வாரிய விசாரணை அதிகாரியாக நீதிபதி ஜெயின் நியமனம்
புதுடெல்லி:
டெலிவிஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்ட்யா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து அவமரியாதையாக கருத்து தெரிவித்தது சர்ச்சையாக வெடித்தது. இதைத் தொடர்ந்து இருவரும் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட்டனர். அதன் பிறகு விசாரணை முடியும் வரை இருவரும் தொடர்ந்து விளையாட இந்திய...
உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி வெளியேற்ற வேண்டும்-இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர்
புதுடெல்லி:
சமீபத்தில், காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் இந்திய துணை ராணுவ படையினர் 40 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் ஒவ்வொரு இந்தியனின் நெஞ்சையும் கொதிக்க வைத்துள்ளது. பாகிஸ்தான் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அந்த நாட்டுடன் கிரிக்கெட் உறவை துண்டிக்க வேண்டும் என்ற...
இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதும் ஒரு நாள் கிரிக்கெட்
மும்பை:
ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து பெண்கள் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒரு நாள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டியில் விளையாடுகிறது. இதில் இந்தியா-இங்கிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று காலை 9...
நியூசிலாந்து வீரர் டெய்லர் புதிய சாதனை-பிளெமிங்கை முந்தினார்
டுனிடின்:
வங்காளதேச கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டித் தொடரில் நியூசிலாந்து அணி முதல் 2 ஆட்டத்தில் வென்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியது.
நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி டுனிடினில் இன்று நடந்தது....
புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்
சென்னை:
முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...























