இந்தூர்:

சையத் முஸ்தாக் அலி கோப்பைக்கான டி20 தொடரின் முதல் சுற்று போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இதில் இந்தூரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை-சிக்கிம் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை கேப்டன் ரகானே, முதலில் பேட் செய்ய முடிவு செய்தார். அதன்படி களமிறங்கிய மும்பை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 258 ரன்கள் குவித்தது.

ஸ்ரேயாஸ் அய்யர் 55 பந்துகளை எதிர்கொண்டு 15 சிக்சர்கள், 7 பவுண்டரிகளுடன் 147 ரன்கள் விளாசினார். இதன் மூலம் உள்ளூர் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். இதற்கு முன் ரிஷப் பந்த், ஐபிஎல் போட்டியில் கடந்த ஆண்டு, சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக 128 ரன்கள் குவித்ததே சாதனையாக இருந்தது.

இதுதவிர டி20 போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் ஸ்ரேயாஸ் அய்யர் (15 சிக்சர்கள்) எட்டினார். இதற்கு முன் முரளி விஜய் ஒரு இன்னிங்சில் 11 சிக்சர்கள் அடித்ததே சாதனையாக இருந்தது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here