குத்தாலம், ஏப். 20 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
குத்தாலம் உக்தவேதீஸ்வரர் சுவாமி கோயில் சித்திரை பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சகோபுர திருவீதியுலா நடைபெற்றது, அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் திருக்கயிலாயப் பரம்பரை தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அரும்பன்ன வனமுலைநாயகி உடனாகிய ஸ்ரீ உக்தவேதீஸ்வரர் சாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் குளத்தில் நீராடினால் சரும நோய்கள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாகும்.
அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவர் பாடல் பெற்ற தேவாரத் தலமான இக்கோவில் திகழ்கிறது இந்த கோவிலின் சித்திரை பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினம்தோறும் பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி திருவீதியுலா காட்சி நடைபெற்று வருகிறது.
ஐந்தாம் நாளான இன்று பஞ்ச மூர்த்திகள் சகோபுரத்தில் எழுந்தருளி திருவீதியுலா காட்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட ஓலை சப்பரத்தில் சுவாமி அம்பாள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். தொடர்ந்து கோவிலில் இருந்து நான்கு ரத வீதிகள் வழியாக கோவிலில் வந்தடைந்தது பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை எடுத்து வழிபட்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர்.



















