கும்பகோணம்,ஏப்.11 –

கும்பகோணம் கிஸ்வா சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு கிஸ்வா தலைவர் கே. ஜாஹிர் உசேன் தலைமை தாங்கினார். செயலாளர் அ. சிராஜ்தீன், செயற்குழு உறுப்பினர் தீன் அஹமது தம்பி, அல்-அமீன் தாளாளர் கமாலுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக தொழிலதிபர் பிளாக் துலிப் எம். முகமது எஹியா  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் மார்க்க அறிஞர் கே.அப்துல் ரஹ்மான் யூசுபி கலந்துகொண்டு பேசியதாவது:-

இஸ்லாமியர்களுக்கு இறை அச்சம் ஏற்பட வேண்டும் என்பதால் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்று நோன்பு ஆகும். ரமலான்  வந்து விட்டால் தீமையான காரணங்கள் தடுக்கப்பட வேண்டும், நன்மையான காரணங்கள் அதிகப்படுத்த வேண்டும் என்பதால் இஸ்லாமியர்கள்  நோன்பு வைத்து 14 மணி நேரத்திற்கு கூடுதலான  இடைவெளியில் எவ்வித ஆகாரங்கள் உண்ணாமல், தண்ணீர் கூட பருகாமல் மாலையில் வீடுகள் மற்றும் பள்ளிவாசல்களில்,  நடைபெறும்  நோன்பு கஞ்சி அருந்திவிட்டு நோன்பை முடிப்பார்கள். மேலும் ரமலான் மாதத்தில் தான் இறைவேதம் முழுமை அடைந்த மாதமாக இருப்பதால்  இஸ்லாமியர்கள்  இரவில் சிறப்பு தொழுகையிலும் ஈடுபடுகின்றனர்.

ரமலான் மாதம் வந்துவிட்டால்  இஸ்லாமியர்கள் தங்கம், வெள்ளி, வியபார பொருட்கள், விவசாய நிலங்கள், ரொக்க கையிருப்பு, என தங்களது ஆண்டு வருமானத்தில் 2.5 சதவீதத்தை கணக்கிட்டு ஏழை வரி எனப்படும் வறுமை ஒழிப்புக்கு பயன்படுத்துகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கண்ணியமிகு செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஜமாஅத்தார்கள், சமுதாய ஆளுமைகள், மற்றும் சிறுவர்கள் என அனைவரும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறந்தனர். முடிவில் திட்ட தலைவர் எம். அக்பர் அலி நன்றி கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here