200 பேர் பங்கேற்கும் தேசிய நடைப்பந்தயம் சென்னையில் 2 நாட்கள் நடக்கிறது
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஜிம்கானா கிளப் அருகில் இருந்து அதிகாலையில் இந்த போட்டி தொடங்குகிறது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 20 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நாளையும் ஆண்களுக்கான 50 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவினருக்கான...
தென்மண்டல எறிப்பந்து: தமிழக அணிகள் சாம்பியன்
லட்சுமிநகர் மற்றும் பினாக்கிள் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 13-வது தென்மண்டல எறிப்பந்து போட்டி சென்னை நங்கநல்லூர் லட்சுமிநகர் 7-வது தெருவில் உள்ள மைதானத்தில் நடந்தது.
இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தமிழக அணி சாம்பியன் பட்டம் பெற்றது. தமிழக ஆண்கள் அணி இறுதிப்போட்டியில் 15-11, 12-15, 15-7...
இந்திய வீரர் சவுரப் சவுத்ரி உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்றார்
புதுடெல்லி:
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நேற்று தொடங்கியது.
இதில், ஆடவர் பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர் சவுரப் சவுத்ரி 245 புள்ளிகளுடன் தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
இதன்மூலம்...
பிரெஞ்ச் கோப்பை காலிறுதி: டி மரியாவின் சிறப்பான ஆட்டத்தால் பிஎஸ்ஜி அரையிறுதிக்கு முன்னேற்றம்
பிரெஞ்ச் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டம் ஒன்றில் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் டிஜோன் அணியை எதிர்கொண்டது. பிஎஸ்ஜி முன்னணி வீரர்களான நெய்மர், கவானி ஆகியோர் இல்லாமல் களம் இறங்கியது. ஆனால் டி மரியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
8-வது மற்றும் 28-வது நிமிடத்தில் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்....
ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன்-கடினமான சுற்றில் சிந்து, சாய்னா
பர்மிங்காம்:
மொத்தம் ரூ.7 கோடி பரிசுத்தொகைக்கான ஆல்-இங்கிலாந்து பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி பர்மிங்காமில் அடுத்த மாதம் (மார்ச்) 6-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் யார்-யாருடன் மோதுவது என்பது குலுக்கல் மூலம் (டிரா) நிர்ணயிக்கப்பட்டு போட்டி அட்டவணை வெளியிடப்பட்டு இருக்கிறது. இதன்படி இந்திய முன்னணி வீரர்,...
புரோ கைப்பந்து ‘லீக்’ இறுதிப்போட்டிக்கு சென்னை தகுதி பெறுமா? கொச்சியுடன் இன்று மோதல்
சென்னை:
முதலாவது புரோ கைப்பந்து ‘லீக்’ போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.
இதன் 2-வது அரை இறுதி ஆட்டம் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் ஸ்பார்ட்டன்ஸ்- கொச்சி புளூஸ் பைக்கர்ஸ் அணிகள் மோதுகின்றன.
இதில் சென்னை அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுமா?...
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் – கலப்பு பிரிவில் இந்திய வீரர்கள் மனு பாகர், சவுரப் சவுத்ரி ஜோடி தங்கம்...
புதுடெல்லி:
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது.
இதில், கலப்பு பிரிவுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டி இன்று நடைபெற்றது. இதில், சிறப்பாக செயல்பட்ட இந்திய வீரர்கள் மனு பாகர் மற்றும் சவுரப் சவுத்ரி ஜோடி தங்கப்...
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல்: விசா வழங்காததால் ஒலிம்பிக் தகுதியை நிறுத்தி வைக்க பாகிஸ்தான் கோரிக்கை
சர்வதேச துப்பாக்கி சுடுதல் பெடரேசன் சார்பில் டெல்லியில் வருகிற சனிக்கிழமை தொடங்குகிறது. 25 மீட்டர் ரேபிட் பையர் பிஸ்டல் போட்டியில் இரண்டு பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்வதாக இருந்தது. இதற்காக அவர்கள் இன்று டெல்லி வருவதாக இருந்தது.
ஆனால் கடந்த 14-ந்தேதி சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது பயங்கரவாதி தற்கொலைப்படை...