பாபநாசம், மே. 25 –
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பகுதிக்குட்பட்ட அம்மாபேட்டை ,மெலட்டூர் ஆகிய பகுதிகளில், இரவு நேரங்களில் தனியாக நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம், நகை, மற்றும் செல்போன்களை பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தது.
இந்நிலையில், அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தாளக்குடியை சேர்ந்த நாகேஷ் (20) சுரேஷ்(35 கீழ கொண்டயம்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (20)கண்ணன் (22) ஆகிய நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து, விலை உயர்ந்த செல்போன்கள், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நான்கு நபர்களையும் பாபநாசம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.





















