இராசிபுரம், ஜூலை. 23 –
சென்னை பேரூராட்சிகளின் ஆணையரின் ஆணைப்படி, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் உத்தரவின் பேரில், மல்லசமுத்திரம் டவுன் பஞ்சாயத்தில், மாதத்தின் நான்காவது சனிக்கிழமையை முன்னிட்டு, தலைவர் திருமலை, ஈ.ஓ.,ரவிக்குமார் தலைமையில், டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில், திடக்கழிவு மேலாண்மை குறித்த சைக்கிள் பேரணி, மாராத்தான் ஓட்டம், சின்ன ஏரிக்கரையில் மரக்கன்றுகள் நடுதல், தூய்மை பணிகள் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடந்தது.
பேரூராட்சி ஆணையரக கண்காணிப்பு பொறியாளர் திருமாவளவன், தர்மபுரி மண்டல பேரூராட்சிகளின் செயல் பொறியாளர் மகேந்திரன், நாமக்கல் மாவட்ட பேரூராட்சிகள் உதவி செயற்பொறியாளர் ஜவஹர், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
























