முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் நல்லிணக்க உறுமொழி ஏற்றனர்.
செய்தி சேகரிப்பு இராம மூர்த்தி, புகைப்படம் இரமேஷ்
திருவண்ணாமலை, ஆக.20-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் பா.முருகேஷ் தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் பா.முருகேஷ் தலைமையில் மத நல்லிணக்க நாள் உறுதிமொழி (19.08.2021) அரசு அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர்.
நான் சாதி, இன, வட்டார, மத அல்லது மொழி பாகுபாடு எதுவுமின்றி, இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதிமொழி எடுத்துக்கொள்கிறேன். மேலும், எங்களுக்கிடையேயான அனைத்து வேறுபாடுகளையும், வன்முறையில் ஈடுபடாமல், பேச்சுவார்த்தைகள் மூலமாகவும், அரசியலமைப்புச் சட்ட வழிமுறைகளைப் பின்பற்றியும் தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதி அளிக்கிறேன் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.முத்துக்குமரசாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வெ.லோகநாதன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.