தேனி மாவட்டம் : தேனி மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் ஐவஹரிபாய் விவசாயிகள் நெல் சாகுபடியில் இரடிப்பு விளைச்சல் பெற வேளாண்மை துணை இயக்குநர் மாநில திட்டம் முனைவர்  இளங் கோவன்  ஆகியோர் கம்பம் வட்டாரம் கீழக் கூடலூர் பகுதியில் உள்ள விவசாயி களிடம் மாநில அரசு விதைப் பண்ணையில் இயந்திர நெல் நடவு செய்வதற்கு நாற்றாங் கால் அமைக்கும் பணி முறைகளை விவரித்து அதனால் ஏற்படும் பயன்களை விவரித்து கூறினர்.  

தேனி மாவட்டம் கூடலூர் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் வாழை. கரும்பு. திராட்சை . தக்காளி, பீட்ரூட். நெல் போன்ற பயிர்களை பயிரிட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக நெல் சாகுபடி அதிகமாக செய்யப்படுகின்றன. நெல் சாகுபடியில் இன்னும் விவசாயிகள் பழைய நடவு முறையையே கடைபிடித்து நடவு நடப்படுவதால் நடவுக் கூலி. அதிக நீர் பயன்பாடு .அதிக கூலி ஆட்களைப் பயன்படுத்துதல் போன்றவைகளால், ஒரு ஏக்கருக்கு குறைந்த அளவே லாபம் ஈட்டப் படுகிறது. இதனால் விவசாயிகள் புதிய நெல் நடவு முறையான. திருந்திய இயந்திர நெல் நடவுசாகுபடி முறையால் .சாதாரண நடவு முறையைக் காட்டிலும் இரு மடங்கு விளைச்சல் கிடைக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் இயந்திர நெல்நடவு சாகுபடிமுறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில். விதை. பூச்சி மருந்து.நாடவுக்கான மானியம். களையெடுக்கும் கருவிக்கான மணியம்.நடவுத்தொளியை தயார் செய்வதற்க்கு மானியம் என ஏராளமான சலுகைகளை கம்பம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ராமு  அவர்களின் ஆலோசணைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கம்பம். இது சம்மந்தமாக அப்பகுதி நெல் விவசாயிகளிடம் கேட்டபோது. பழைய முறையில் விவசாயம் செய்தால் எங்களுக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. வேளாண்மை விரிவாக்க அலுவலகத்தின் மூலமாக வழங்கப்படும் விதை மற்றும் இயந்திர நடவுமுறையால் இரு மடங்கு லாபம் கிடைக்கிறது என்றார்

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here