Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

பாஜக மற்றும் காங்கிரஸ் சார்பில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக குற்றச்சாட்டு : புதுச்சேரியில் சுயேட்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து...

புதுச்சேரி, ஏப். 18 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத் ... பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம் தருவதாகவும்,  இதனால் இரு கட்சியின் வேட்பாளர்களையும் கைது செய்ய வலியுறுத்தி சுயேச்சை வேட்பாளர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். https://youtu.be/4RCevZhdpk8 பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சியினர் வாக்காளர்களுக்கு பணம்...

7 ஆண்டுகளை நிறைவு செய்தது ‘மைகவ்’ இணையதளம்

பிரதமர்  நரேந்திரமோடியால் தொடங்கப்பட்ட ‘மைகவ்’ இணையதளம், 7 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. ஆன்லைன் தளம் மூலம் மக்களுக்கு நெருக்கமாக, அரசை கொண்டு செல்ல ‘மைகவ்’ (https://www.mygov.in/) என்ற இணையதளத்தை பிரதமர்  நரேந்திர மோடி 2014ம் ஆண்டு ஜூலை 26ம் தேதி தொடங்கி வைத்தார். இதன் மூலம் நாட்டில் சமூக மற்றும் பொருளாதார மாற்றத்துக்கு தேவையான கருத்துக்களை ஆரோக்கியமான முறையில் மக்கள்  பகிர்ந்துக் கொண்டனர். இந்த தளம் தனது 7 ஆண்டு பயணத்தை நிறைவு செய்துள்ளது. மக்கள் பங்களிப்பு நிர்வாகத்தை வளர்த்ததில், மைகவ் இணைய தளத்தின் பங்களிப்பை நினைவு கூறும் நிகழ்ச்சி, ‘நேர்மறையான எனது அரசு (MyGov Positive ) என்ற கருப்பொருளில் நடத்தப்பட்டது. சமூக இணையதளத்தை நேர்மறையாக பயன் படுத்துவதை ஊக்கு விப்பதற்காக இந்நிகழ்ச்சி நடத்தப் பட்டது. கொரோனா பற்றி தவறான தகவல்கள் நாட்டில் பரவும் நிலையில், மைகவ் இணையதளத்தின் கொரோனா உதவி மையம் - வாட்ஸ் அப் கலந்துரையாடல் மூலம் பொய் செய்தி களுக்கும் பதில் அளிக்கும் வகையில் நம்பகமான செய்திகளை வழங்கியது. மக்களை ஈடுபாடு கருத்தை முன்னெடுத்துச் சென்று, சிறந்த நிர்வாக இலக்கை அடைய, மைகவ் உத்தரப்பிரதேசம் இணையதளத்தை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர்  அஸ்வினி வைஷ்ணவ், உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யாநாத் ஆகியோர் இணைந்து இன்று தொடங்கி வைத்தனர். மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், இத் துறை செயலாளர் அஜய் பிரகாஷ் ஷானே, மைகவ் இணையதள தலைமை நிர்வாக அதிகாரி  அபிஷேக் சிங் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். மைகவ் குழுவின் பங்கை பாராட்டிய மத்திய தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘‘மக்களுக்கு டிஜிட்டல் அதிகாரம் அளிப்பதன் மூலம், அனைத்தும் உள்ளடங்கிய நல்ல நிர்வாகத்தை ஏற்படுத்தும் பிரதமரின் கனவை நனவாக்க மைகவ் இணையதளம் பணியாற்றியுள்ளது’’ என்றார்.  ஆட்சி நிர்வாகம் மற்றும் வளர்ச்சியில் மக்களின் தீவிர பங்களிப்பை ஊக்குவிப்பதில் மைகவ் இணையதளம் ஆற்றிய புதுமையான பங்கை உத்தரப் பிரதேச முதல்வர்  யோகி ஆதித்யநாத் மற்றும் மத்திய அமைச்சர் திரு ராஜீவ் சந்திரசேகர் ஆகியோர் பாராட்டினர். 

நான் தலித் என்பதால் முதல்வராக முடியவில்லை-பரமேஸ்வரா பேச்சு

தேவநகரி: கர்நாடக மாநிலம் தேவநகரி பகுதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு கர்நாடக துணை முதல் மந்திரி பரமேஸ்வரா உரையாற்றினார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: தலித்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒடுக்கு முறைகளில் நானும் பாதிக்கப்பட்டேன். நான் தலித் என்பதால் தான் என்னால் முதல்வர் பதவிக்கு வர முடியவில்லை....

உ.பி.யில் 4 நாள் பயணம்-பிரியங்கா காந்தி வாரணாசி செல்கிறார்

லக்னோ: பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியில் பொதுச் செயலாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டார். அவருக்கு உத்தரபிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதி பொறுப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 41 எம்.பி. தொகுதிகளை இவர் கவனிப்பார். தீவிர அரசியலில் குதித்துள்ள பிரியங்கா காந்தி 4 நாட்கள் உத்தரபிரதேசத்தில் முகாமிட்டு தேர்தல்...

74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் கொண்டாடியது …

டெல்லி, ஜன. 16 - 74வது ராணுவ தினத்தை இந்திய ராணுவம் நேற்று கொண்டாடியது. கடைசி பிரிட்டிஷ் தலைமை கமாண்டர் சர் எப்ஆர்ஆர் புச்சரிடமிருந்து, இந்திய ராணுவத்தின் பொறுப்பை ஜெனரல் கே.எம். கரியப்பா (பீல்டு மார்ஷல்)  ஏற்றுக்கொண்டு சுதந்திர இந்தியாவின் முதல் இந்திய தலைமை கமாண்டரானதை கொண்டாடும் வகையில்,...

உணவுப் பொருட்கள் உள்ளதா என சோதனை செய்து பாரதி பூங்காவிற்குள் அனுப்பிய நகராட்சி ஊழியர்கள் : புதுச்சேரி பொதுமக்களிடம்...

புதுச்சேரி, ஏப். 28 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரி பாரதி பூங்கா நுழை வாயிலில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கொண்டு வந்த உணவு சார்ந்த பொருட்களை நகராட்சி ஊழியர்கள் சோதனை செய்து அனுமதிப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. சுற்றுலா நகரமான புதுச்சேரிக்கு...

இபிஎஸ் சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழப்பார்கள்.. வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில்தான் நாங்கள்...

புதுச்சேரி, பிப். 25 – தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச் செய்தியாளர் சம்பத்… புதுச்சேரியில் அதிமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக புதுச்சேரிக்கு வருகை புரிந்த ஓபிஎஸ் காமராஜர் சாலையில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் ஓய்வெடுத்தார். அப்போது அவருக்கு மாநில கழக செயலாளர் ஓம் சக்திசேகர் சார்பில் சிறப்பான...

பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் விருதாளர்களுடன் நாளை பிரதமர் கலந்துரையாடுகிறார்

புதுதில்லி, ஜன. 23 - முதல் முறையாக விருதாளர்களுக்கு பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி டிஜிடல் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. பிரதம மந்திரி ராஷ்ட்ரீய பால் புரஸ்கார் (பிஎம்ஆர்பிபி) விருதாளர்களுடன் நாளை ( ஜனவரி 24-ந்தேதி ) பிரதமர் நரேந்திர மோடி நண்பகல் 12 மணியளவில் காணொலி வாயிலாக கலந்துரையாடுகிறார்.     2022...

இன்று நடைப்பெறும் டி.ஏ.ஆர்.பி.ஜி யின் தொலைநோக்கு இந்தியா @2047 திட்ட ஆவண உருவாக்கம் ஆலோசனைக்கூட்டம் …. மத்திய அமைச்சர்...

டெல்லி, ஜன. 15 - நிர்வாகம் குறித்த துறைசார்ந்த நிபுணர்களுடன் இன்று நடைபெறும் டிஏஆர்பிஜி -யின் தொலைநோக்கு இந்தியா @2047 கூட்டத்திற்கு மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமைதாங்கவிருக்கிறார். காலவரம்புகளுடனும் சிறப்பு அம்சங்களுடனும் இந்த சகாப்தத்திற்கான நீண்டகால இலக்குகளையும் தொடர்ச்சியான விளைவுகளையும் அடையாளம் காண்பதற்கு தொலைநோக்கு இந்தியா @2047க்கான...

பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்களுக்கு தடையில்லா சான்றிதழ்கள் … பாதுகாப்புத் துறை இணையமைச்சர் அஜய் பட்

சென்னை, பிப். 12 - பாதுகாப்பு தொடர்புடைய மையப்பொருள் அடிப்படையிலான திரைப்படங்கள் தயாரிக்க தடையில்லா சான்றிதழ்கள் கோரி, திரைப்பட தயாரிப்பாளர்களிடம் இருந்து, 2021 ஜனவரி 1 முதல் 2022 ஜனவரி 31 வரை மொத்தம் 18 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.  இவற்றில் 11 முழு நீள கதைப்படங்களுக்கானவை, 7 ஆவணப்படங்கள்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS