காஞ்சிபுரம், ஏப். 07 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ் ..
மாலை மற்றும் இரவு வேளையிலும் தொடரும் பிரச்சாரம்
சிக்கன் பக்கோடா சமைத்து கொடுத்து நூதன முறையில் வாக்குகளை கேட்ட அதிமுக நிர்வாகி
100க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்குகளை சேகரித்தனர்
மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். நேரம் குறைவாக இருப்பதால் வேட்பாளர்களை அனைத்து இடத்திற்கும் செல்ல முடியாத சூழலும் ஏற்பட்டுள்ளது. இதனால் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தங்கள் பகுதிகளில், வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
அதலும் குறுப்பாக மாலை வேளைகளில் வீடு வீடாக தங்களது ஆதரவாளர் படைகளுடன் செல்லும் அரசியல் கட்சி வேட்பாளர்கள் அவரவர் சின்னத்திற்கு வாக்குகளை கேட்டு வருகின்றனர்.
அவ்வகையில் நேற்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பிள்ளையார் பாளையத்தின் ஒரு பகுதி, ஏகாம்பரநாதர் சன்னதி தெரு, எஸ் வி. என் பிள்ளைத்தெரு, ஓ பி குளம், குண்டு குளம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட பகுதிகளில் வட்ட துணைச் செயலாளர் அஸ்வின் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் மற்றும் பெண்கள் அதிமுகவின் கொடியை கையில் ஏந்தியவாறு இரட்டை இலை சின்னத்திற்கு வீதி வீதியாக சென்று வாக்குகளை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
மேலும் வீடு வீடாக சென்று அதிமுக வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு கேட்டனர்.
மேலும் அங்கிருந்த சிக்கன் பக்கோடா கடைக்கு சென்ற அதிமுக நிர்வாகிகள் சிக்கன் பக்கோடாவை சமைத்துக் கொடுத்து நூதன முறையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர் . இந்தப் பிரச்சாரத்தின் பொழுது மாவட்ட அதிமுக பொருளாளர், வி வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே யு எஸ் சோமசுந்தரம், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் வி ஆர் மணிவண்ணன், மாவட்ட மாணவரணி செயலாளர் வழக்கறிஞர் திலக்குமார், காஞ்சி மாநகர வடக்கு பகுதி செயலாளர் எஸ் ஜெயராஜ், காஞ்சி மாநகர மாமன்ற உறுப்பினர்கள் ஏ கே வேலரசு, குட்டி என்கின்ற சண்முகானந்தம், வி பழனிவேல், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை துணைச் செயலாளர் B நிர்மல் குமார்,வடக்குப் பகுதி துணைச் செயலாளர் பி தியாகராஜன், வட்டத்துணை செயலாளர் லோகநாதன், வட்ட பிரதிநிதி சூர்யா, வட்ட மகளிர் அணி பிரதிநிதி ரேணுகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.





















